இலங்கையர் உருவாக்கிய கோவிட் செயலியை கொள்வனவு செய்த பிரபல நிறுவனம்
இலங்கையை பிறப்பிடமாக கொண்ட பேராசிரியர் உதயந்த அபேரட்ன தலைமையிலான குழுவினர் உருவாக்கிய கோவிட் செயலியை பிரபல நிறுவனமொன்று கொள்வனவு செய்துள்ளது.
பிரபல மருந்துப்பொருள் உற்பத்தி நிறுவனமான பைசர் நிறுவனம் 180 அமெரிக்க டொலர்களுக்கு குறித்த செயலியை கொள்வனவு செய்துள்ளது.
அலைபேசி செயலி
கோவிட் பெருந்தொற்றினை அடையாளம் காணக்கூடிய அலைபேசி செயலி ஒன்றே இவ்வாறு கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகத்தின் பேராசிரியரான உதயந்த அபேரட்ன தலைமையிலான குழு இந்த செயலியை கண்டு பிடித்துள்ளது.
கோவிட் பரிசோதனை
நோயாளிகளின் இறுமலை ஸ்மார்ட் தொலைப்பேசிகளில் பதிவு செய்து அதனை ஆய்வுக்கு உட்படுத்தி கோவிட் பரிசோதனை நடத்தப்படுகின்றது.
ஸ்மார்ட் தொலைப்பேசி செயலி மூலம் கோவிட் தொற்றை கண்டு பிடிக்க முடியும் எனவும் அதற்கான ஓர் செயலியையே இவ்வாறு இலங்கை பேராசிரியர் தலைமையிலான குழு உருவாக்கியுள்ளது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த செயலி சுமார் 92 வீத துல்லியத்தன்மையை கொண்டது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.




