பயனை பாராமல் பணியாற்றும் இலங்கை குடிமகன் (Video)
பாதையில் செல்பவர்கள் கொடுக்கும் பணத்தை வைத்துத் தான் குடும்ப செலவுகளைப் பார்க்கின்றோம் என சமூக சேவை புரியும் இளைஞன் ஒருவர் தனது பணி தொடர்பில் மனம் திறந்துள்ளார்.
தேவைக்கு அதிகமான பணத்தை வைத்திருந்தாலும் இல்லாதவரை பற்றி மனதளவில் நினைக்காதவர்கள் மத்தியில் முன்பின் அறிமுகமில்லாத முகங்களின் பாதுகாப்பிற்காக இளைஞன் ஒருவன் தன்னை வருத்திக்கொண்டு சமூக சேவை புரிகிறார்.
குறித்த இளைஞன் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டில் எத்தனை வன்முறைகள் தினம் அரங்கேறினாலும் மனிதத்தின் மீதான நம்பிக்கையே வாழ்வை நகர்த்திச் செல்கின்றது. இந்த பாலத்திற்குக் கீழ் வாகனங்கள் செல்லும் போது நிறுத்தல் பலகைகளைக் காண்பித்து வாகன நெரிசல் இல்லாமல் துரிதமாகப் போக்குவரத்து நடைபெற வேலை செய்கின்றேன்.
எனது தந்தை தான் இந்த தொழிலை ஒன்பது வருடங்களாகச் செய்தார். அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் இறந்துவிட்டார். அதனால் நான் இப்போது செய்கின்றேன்.
இதற்காக எந்த சம்பளமும் கிடைக்காது. பாதையில் செல்பவர்கள் கொடுக்கும் பணத்தை வைத்துத் தான் குடும்ப செலவுகளைப் பார்க்கின்றோம். இந்த பாதையில் தினமும் வேலைகளுக்குச் செல்பவர்கள், பாடசாலைக்குச் செல்லும் மாணவர்கள் பெறும் சிரமத்தை எதிர்நோக்குகிறார்கள்.
அவர்களுக்கு உதவும் வகையில் இதனைச் செய்கின்றேன்.மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதுக்காக விரும்பி இந்த வேலையைச் செய்கின்றேன். இதனை ஒரு சமூக சேவையாகவும் செய்கின்றேன்.
இந்த வழியில் செல்பவர்கள் நிறையபேர் உதவி செய்வார்கள். இந்த பாதையில் வாகனங்கள் செல்லும் போது விபத்துக்கள் ஏற்படும். அதனால் சண்டைகளும் வரும். மழைக்காலங்களில் நனைந்துகொண்டு வேலை செய்ய வேண்டிய நிலையே உள்ளது.இருப்பினும் இதனை விரும்பியே செய்கின்றேன்.
`சுற்றத்தால் சுற்றப் படவொழுகல் செல்வந்தான் பெற்றத்தால் பெற்ற பயன்!’ என்பது வள்ளவனின் வாக்கு இதில், சுற்றத்தாருக்கு உதவவும் வேண்டும். அவர்களிடம் இனிய சொற்களைப் பேசவும் வேண்டும். இப்படிச் செய்வோமானால் சுற்றத்தார் பலர் நம்மைச் சூழ்ந்திருப்பர். செல்வத்தால் பெற்ற பயன் என்பது சுற்றத்தால் சூழ்ந்திருப்பதுதான் என்பதே சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எனவே, மக்களின் பாதுகாப்பிற்காக எந்த பலனும் எதிர் பார்க்காத இந்த இளைஞரின் செயல் இன்னும் பலருக்கு ஒரு எடுத்துக் காட்டாக அமையும்.பிறர் சிரிப்பிற்குக் காரணமாவதே பெரும் மகிழ்ச்சி'' இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.




