இலங்கை வந்த விமானத்தில் சிறுமிக்கு நேர்ந்த கதி
சவூதி அரேபியாவில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த விமானத்தில் சிறுமியை தகாத முறைக்கு உட்படுத்திய இந்தியர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
அவரை எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸ் நேற்று உத்தரவிட்டுள்ளார்.
பேதரய்யா வதனாபில்லை என்ற 47 வயதுடைய இந்தியரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
சந்தேக நபர் கைது செய்யப்பட்டு சிவில் விமான போக்குவரத்து அதிகாரசபை சட்டத்தின் கீழ் ஒப்படைக்கப்பட்டது.
பொலிஸ் அறிக்கை
இதனையடுத்து இலங்கை குற்றவியல் சட்டத்தின் 345வது பிரிவின் கீழ் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார் என விமான நிலைய பொலிஸ் நிலைய பொலிஸ் அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சவூதி அரேபியாவின் ரியாத்தில் இருந்து இலங்கைக்கு வந்த ஸ்ரீலங்கான எயார்லைன்ஸ் விமான நிறுவனத்திற்கு சொந்தமான UL 266 என்ற விமானத்தில் இந்த அசம்பாவிதம் நடைபெற்றுள்ளது.
இதில் 8 வயதுடைய சிறுமி தகாத முறைக்கு உள்ளாக்கப்பட்டதாக விமான ஊழியர்களிடம் முறைப்பாடு செய்துள்ளதாக விமான நிலைய பொலிஸார் நீதிமன்றில் அறிவித்துள்ளனர்.

பதினாறாவது மே பதினெட்டு 23 மணி நேரம் முன்

கோடிக்கணக்கில் செலவு செய்து பிள்ளைகளை கனடாவுக்கு அனுப்பாதீர்கள்: எச்சரிக்கும் தொழிலதிபர் News Lankasri

ரஷ்யாவின் கேபிள் தாக்குதலை முறியடிக்க "இராஜ ட்ரோன் நீர்மூழ்கி" கப்பலை வடிவமைத்த பிரித்தானியா News Lankasri

எனது கல்விக் கட்டணம் இனப்படுகொலைக்கு செலவழிக்கப்படுகிறது: பட்டமளிப்பு விழாவில் குமுறிய மாணவி News Lankasri
