இலங்கை இணையத்தளங்களில் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான சிறுவர் சமூக பிறழ்வு புகைப்படங்கள்
இலங்கையில் கடந்த 2023 ஆம் ஆண்டில் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான சமூக பிறழ்வான சிறுவர் புகைப்படங்கள் இணையத்தளத்தில் வெளியாகியுள்ளதாக பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சில் நேற்று (18.01.2024) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,
இலங்கையில் கடந்த ஆண்டில் மாத்திரம் அடையாளம் தெரியாத நபர்களால் ஒரு இலட்சத்துக்கும் அதிகமான பதின்ம வயதினரின் சமூக பிறழ்வான படங்கள் மற்றும் காணொளிகள் இணையத்தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
சிறுவர் மீதான அத்துமீறல்
இந்நிலையில், சந்தேக நபர்கள் தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சிறுவர் மீதான அத்துமீறல்கள் தொடர்பில் அமைப்பொன்றினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் பின்னர் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
மேலும், சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தினால் 24 மணிநேர தொலைபேசி சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில் சிறுவர் மற்றும் பெண்கள் தொடர்பான பிரச்சினைகளை 109 இலக்கத்திற்கு தெரிவிக்க முடியும்” என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





திருமண மண்டபத்தில் ஆனந்தி கர்ப்பமாக இருக்கும் விஷயம் வெளிவந்தது.. ஷாக்கில் குடும்பம், சிங்கப்பெண்ணே புரொமோ Cineulagam

இந்தியக் கடற்படைக்கு ரூ.1 இலட்சம் கோடி மதிப்பில் 9 அதிநவீன நீர்மூழ்கி கப்பல்கள்., CCS ஒப்புதல் விரைவில் News Lankasri

தந்திரமாக வேலை செய்து காய் நகர்த்திய குணசேகரன், சந்தோஷத்தில் அறிவுக்கரசி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
