புகலிடக் கோரிக்கையாளர்கள் தொடர்பில் மகிழ்ச்சி வெளியிட்டுள்ள அவுஸ்திரேலியா
கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக இலங்கையில் இருந்து அவுஸ்திரேலியாவிற்கு செல்ல முற்படும் புகலிடக் கோரிக்கையாளர்களின் ஒரு படகு கூட தம்மால் இடைமறிக்கப்படவில்லை என அவுஸ்திரேலிய (Australia) இராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் குறிப்பிடுகையில்,
"புகலிடக் கோரிக்கையாளர்களைத் தடுக்கும் கொள்கைகளைத் தொடர்ந்து செயல்படுத்தி வருவதால் இந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், புதிய கூட்டு நடவடிக்கையின் அடிப்படையில் அவுஸ்திரேலிய எல்லைப் படை மற்றும் இலங்கை கடலோர திணைக்களம் ஆகியன இணைந்து திக்கோவிட்ட முதல் சிலாபம் வரையிலான ஒரு வார கால வேலைத்திட்டத்தை மேற்கொள்ளவுள்ளன.
வெளிநாடுகளுக்கு பயணம்
அதேவேளை, அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முடியாவிட்டாலும் கடந்த மாதம் வரை தமிழர்கள் தீவை விட்டு வெளியேறுவது தொடர்ந்துள்ளது.
இதில் பலர் இந்தியாவின் தமிழ்நாட்டுக்கு செல்கின்றனர்.
அத்துடன் தமிழ் சிறுவர்கள், கல்வி நோக்கங்களுக்காக ஐரோப்பிய நாடுகளுக்கு அனுப்பப்பட்டு வருகின்றனர்” என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |