மாலைதீவில் 450 கிலோ போதைப்பொருட்களுடன் பிடிபட்ட இலங்கையின் கடற்றொழில் படகு
450 கிலோவுக்கும் அதிகமான போதைப்பொருளை ஏற்றிச் சென்ற இலங்கை கடற்றொழில் படகு ஒன்று, மாலைதீவு கடலோர காவல்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
கடத்தலில் 344 கிலோ கிரிஸ்டல் மெத்தம்பேட்டமைன் மற்றும் 124 கிலோ கோகோயின் ஆகிய போதைப்பொருட்கள் அடங்கியிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை கடற்படைக்கும் மாலைத்தீவு கடலோரக் காவல்படைக்கும் இடையிலான உளவுத்துறைப் பகிர்வு முயற்சியின் பயனாகவே இந்த போதைப்பொருள் கடத்தப்பட்டுள்ளது.
மாலைதீவு அதிகாரிகளுக்கு தகவல்
நேற்று இந்த படகு, மாலைத்தீவு பிரத்தியேக பொருளாதார வலயத்திற்குள் நுழைந்தபோது, இலங்கையின் கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தால், மாலைதீவு அதிகாரிகளுக்கு தகவல் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையி;ல் விசாரணையின்போது, குறித்த இழுவை படகு போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகளுடன் தொடர்புடைய அசேன் புத்தா என்ற இலங்கையின் படகு என அடையாளம் காணப்பட்டுள்ளதுஇ
இந்த நடவடிக்கையின் போது, 21 மற்றும் 37 வயதுடைய தெவுந்துறை மற்றும் திருகோணமலையைச் சேர்ந்த ஐந்து சந்தேக நபர்கள் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW | 
 
    
     
    
     
    
     
    
     
        
    
    இந்துமாகடல் அரசியலும் ஈழத் தமிழர் அரசியலும் 2 நாட்கள் முன்
 
    
    சீனாவில் இருந்து அரிய பூமி கனிமங்களை இறக்குமதி செய்ய உரிமம் பெற்றுள்ள இந்திய நிறுவனங்கள் News Lankasri
 
    
     
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                             
         
     
     
 
 
 
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        