ஐரோப்பிய நாடொன்றில் கொடூரமாக தாக்கப்பட்ட இலங்கையர்
ஐரோப்பிய நாடான இத்தாலியின் நேப்பிள்ஸ் நகரில் மின்தூக்கி அருகே, இலங்கையர் ஒருவர் கொடூரமாக தாக்கப்பட்டுள்ளார்.
இலங்கையர் மீதான வன்முறையுடன் கூடிய கொள்ளை மற்றும் சட்டவிரோதமாக ஆயுதம் வைத்திருந்த குற்றத்திற்காக, அல்ஜீரியாவைச் சேர்ந்த 32 வயதான Nadhir Brighen என்பவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அவர் ஏற்கனவே பொலிஸாரின் குற்றப் பதிவேடுகளில் உள்ளவர் என தெரியவந்துள்ளது.
இலங்கையர் மீது தாக்குதல்
மின்தூக்கியில் ஏறுவதற்காக 57 வயதான இலங்கை நபர் ஒருவர் காத்திருந்த போது, Brighen அவரைப் பின்புறமிருந்து தாக்கி, அவரது கழுத்திலிருந்த தங்கச் சங்கிலியை பறித்துள்ளார்.

எனினும் அருகில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸார் விரைந்து செயற்பட்டு சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.
மேலும் சந்தேக நபரிடமிருந்து கத்தி ஒன்றையும் பறிமுதல் செய்தனர். இச்சம்பவத்தில் லேசான காயமடைந்த இலங்கையருக்கு அதிகாரிகள் முதலுதவி அளித்தனர்.
கைது செய்யப்பட்ட Brighen தற்போது பொலிஸ் காவலில் வைக்கப்பட்டு, நீதிமன்ற விசாரணைக்காக காத்திருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சீனாவால் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்... பிரித்தானியா உட்பட ஐந்து நாடுகள் விடுத்த எச்சரிக்கை News Lankasri