ஐரோப்பிய நாடொன்றில் சினிமா பாணியில் விரட்டி பிடிக்கப்பட்ட இலங்கை இளைஞன்
இத்தாலியில் சினிமா பாணியில் இலங்கை இளைஞன் ஒருவர் பொலிஸாரினால் விரட்டி பிடிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ரோம் நகரின் புறநகர்ப் பகுதியான Tor Cervara உள்ள Via della Cervelletta வீதியில் நள்ளிரவில் இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருடப்பட்ட ஸ்கூட்டர் ஒன்றில் பயணித்த இலங்கையர் காராபினியேரி போக்குவரத்து பொலிஸாரின் நிறுத்தச் சமிக்ஞையை மீறி அதிவேகமாக தப்பியோடியுள்ளார்.
தப்பியோடிய இலங்கையர்
இதனைத் தொடர்ந்து பொலிஸார் அந்த நபரை தீவிரமாகத் துரத்திச் சென்றுள்ளனர். பொலிஸாரின் துரத்தலின் போது நிலைதடுமாறிய அந்த நபர், இறுதியில் அங்கிருந்த ஒரு வயல்வெளிக்குள் புகுந்து நின்றுள்ளார்.

Rome Tor Sapienza பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த காராபினியேரி அதிகாரிகளால் அந்த நபர் வெற்றிகரமாக தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டார்.
எனினும், தனக்கு எவ்வித மருத்துவ உதவியும் தேவையில்லை என அவர் பொலிஸாரிடம் மறுத்துவிட்டார். முதற்கட்ட விசாரணையில், அவர் பயணித்த ஸ்கூட்டர் அதற்கு முந்தைய நாள் ரோம் தலைநகரில் திருடப்பட்டது என்பது கண்டறியப்பட்டது.
ஏற்கனவே குற்றப் பின்னணி கொண்ட 38 வயதான இலங்கையர் மீது, பொலிஸார் கைது செய்ய விடாது தடுத்தமை மற்றும் திருடப்பட்ட பொருட்களை தன்வசம் வைத்திருந்தமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் தற்போது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.