பிரித்தானியாவில் இலங்கை இளைஞனின் மோசமான செயல்
பிரித்தானியாவில் ஊழியர்களிடம் மோசமாக செயற்பட்ட இலங்கையர் ஒருவர் தனது குற்றத்தை ஏற்றுக்கொண்டுள்ளார்.
சவுதாம்ப்டன் பகுதியிலுள்ள புகலிட கோரிக்கையாளர்கள் தங்கும் விடுதியில் ஊழியர்களைத் தாக்கியதாக குற்றச்சாட்டை 33 வயதான இலங்கையர் ஏற்றுக்கொண்டுள்ளார்.
கடந்த 2025 ஆகஸ்ட் 15 ஆம் திகதி தனது தொலைபேசி இயங்கவில்லை என்ற கோபத்தில் விடுதியின் வரவேற்பறைக்குச் சென்ற குறித்த நபர், அங்கு பணியாற்றிய ஊழியர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
வழக்கின் விசாரணை
இதன்போது இன ரீதியான கருத்துக்களை வெளியிட்டதுடன், தனது ஆடைகளையும் களைந்து அநாகரியமான முறையில் நடந்து கொண்டதாக நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று இந்த வழக்கின் விசாரணையின் போது, ஊழியர்களைத் தாக்கிய இரண்டு குற்றச்சாட்டுகளை குறித்த நபர் ஏற்கனவே ஒப்புக்கொண்டிருந்தார்.
அநாகரீகமாக நடந்துகொண்ட குற்றச்சாட்டு தொடர்பான சிசிடிவி ஆதாரங்களை ஆய்வு செய்த நீதிபதிகள் குழாம், அவர் மீதான குற்றத்தை உறுதி செய்து தீர்ப்பளித்தனர். குறித்த நபருக்கான தண்டனை அடுத்த வழக்கின் போது அறிவிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஈரானின் புதிய உச்ச தலைவர் உயிருடன்தான் இருக்கிறார்: உடல்நிலை குறித்து ஜனாதிபதியின் மகன் News Lankasri