ஆவேசமடையும் மக்களின் போராட்டத்தால் திணறும் இலங்கை இராணுவம் (VIDEO)
கடும் பொருளாதார நெருக்கடியினால் அரசாங்கத்திற்கு எதிராக ஆவேசமடைந்து பல பகுதிகளிலும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை கட்டுப்படுத்த முடியாமல் இலங்கை இராணுவம் திணறி வருவதாக பிரித்தானியாவில் இருக்கக்கூடிய அரசியல் மற்றும் பொருளாதார ஆய்வாளர் இதயச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.
இலங்கை இராணுவம் தமது சொந்த உறவுகளை எதிர்க்கொண்டு வருகின்றனர். ஆர்பாட்டத்தில் ஈடுபடுபவர்கள் இராணுவத்தினரின் உறவுகளாக , ஊர் மக்களாக காணப்படுகின்றனர்.
இதன் காரணமாக இராணுவத்தினர் திணறி வருகின்றனர்.
இவை ஜேவிபி காலத்திலான ஆயுத போராட்டமில்லை என்றும்,இவை தன்னியல்பான மக்கள் எழுச்சி என்றும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது ஊடறுப்பு நிகழ்ச்சி,



