பாக்கு நீரிணையை நீந்தி கடந்து சாதனை படைத்த இலங்கை இராணுவ சிப்பாய்
தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடி வரை பாக்கு நீரிணையை நீந்தி கடந்து மீள திரும்பி இலங்கை விமானப்படை வீரர் சாதனை படைத்துள்ளார்.
இலங்கை விமானப் படையின் ரொஷான் அபேசுந்தர என்பவரே இவ்வாறு சாதனை படைத்துள்ளதாக தெரியவருகிறது.
அவர் குறித்த சாதனையை 28 மணி 19 நிமிடங்கள் 58 விநாடிகளில் பதிவு செய்துள்ளார்.
இதேவேளை அவர் கடந்த மார்ச் மாதம் 21ஆம் திகதி 49 கிலோமீற்றர் கடல் பயணத்தை 23 மணிநேரத்தில் கடந்து தேசிய சாதனையை பதிவு செய்திருந்தார்.
இதற்கு முன்னர் 1971ஆம் ஆண்டு குமார் ஆனந்தன் என்பவர் பாக்கு நீரிணையை நீந்தி கடந்து மீள திரும்பிய முதலாவது இலங்கையர் என்ற சாதனையை படைத்தார்.
இந்த நிலையில் ரொஷான் அபேசுந்தர தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடி வரை பாக்கு நீரிணையை நீந்தி கடந்து மீள திரும்பிய இரண்டாம் இலங்கையர் என்பது குறிப்பிடத்தக்கது.

சுவிட்சர்லாந்தில் கேளிக்கை விடுதியில் தீ விபத்து: இத்தாலி மற்றும் பிரான்ஸ் நாட்டவர்கள் பாதிப்பு News Lankasri
15 பந்துகளில் 6 சிக்ஸர்களுடன் 47 ரன்! 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தி சம்பவம் செய்த வீரர் News Lankasri