மக்களைத் தேடி வீட்டுக்கே வரும் இலங்கை இராணுவம்
இலங்கையின் தேசிய தடுப்பூசி வழங்கல் திட்டத்தை வெற்றிகரமாக முன்னோக்கிக் கொண்டு செல்லும் நோக்கில், இலங்கை இராணுவம் மேல் மாகாணத்தை அடிப்படையாகக் கொண்டு நடமாடும் தடுப்பூசி வழங்கும் சேவையை இன்று முதல் ஆரம்பித்துள்ளது.
அதற்கமைய முதியவர்கள், நோய் பாதிப்புக்களுக்குள்ளானவர்கள், விசேட தேவையுடையவர்கள், பலவீனமானவர்களின் நலன் கருதி இந்தத் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியும் கோவிட் பரவல் தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவருமான ஜெனரல் ஷவேந்திர சில்வாவின் எண்ணக்கருவிற்கு அமைவாக மேல் மாகாணத்தை அடிப்படையாகக் கொண்டு நடமாடும் தடுப்பூசி வழங்கும் சேவை ஆரம்பமாகியுள்ளது.
அதன்படி ஆரம்பக்கட்டமாகத் தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ளும் அவசியம் உடையவர்கள் இலங்கை இராணுவ வைத்திய படையினருடன் தொடர்பு கொண்டு பதிவுகளைச் செய்துகொள்ள முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
அதற்காக 10 சிறப்பு நடமாடும் வாகனங்கள் தயார் நிலையின் காணப்படுவதுடன், முன்பதிவு செய்துகொண்ட பின்னர் தடுப்பூசிகள் வீட்டிற்கே வந்து வழங்கப்படும் கோவிட் பரவல் தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையம் அறிவித்துள்ளது.