குற்றவாளிகள் நாட்டை விட்டு தப்பி செல்ல கடவுச்சீட்டுகளை தயாரித்தவர்களின் பரிதாப நிலை
கொழும்பின் புறநகர் பகுதியான கடவத்தை பிரதேசத்தில் சட்டவிரோத ஆவணங்கள் தயாரித்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பல்வேறு குற்றங்களுடன் தொடர்புடைய குற்றவாளிகள் நாட்டை விட்டு தப்பிச் செல்வதற்காக வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை தயாரித்தவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களிடம் இருந்து 10 மில்லிகிராம் அளவுக்கு அதிகமான போதைப்பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணை
கடவத்தை பிரதேசத்தில் சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களிடம் இருந்து கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய, ஹோமாகம பிரதேசத்தில் போலி விமான டிக்கெட் தயாரிக்க ஊக்குவித்ததாக கூறப்படும் மற்றுமொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர்கள் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவில் தடுத்து வைக்கப்பட்டு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |