எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலால் இலங்கைக்கு பேரிழப்பு - செய்திகளின் தொகுப்பு
கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் தீப்பிடித்த வெளிநாட்டு வணிகக் கப்பலில் அடங்கியிருந்த இரசாயனங்கள் கடல் வாழ் உயிரினங்களுக்கு கடுமையான அச்சுறுத்தலாக அமைந்துள்ளதாக இலங்கை கடல் சூழலியலாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கடல் மாசடைவு பேரழிவின் ஐந்து சதவீதத்தை மாத்திரமே கடற்கரையில் காணக்கூடியதாக இருப்பதாக, இலங்கையின் கடல் சூழலைப் பாதுகாக்க செயற்படும், தன்னார்வ அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
குறித்த அழிவின் 95% கடலிலேயே காணப்படுவதாகவும், கண்களால் நாம் பார்ப்பது ஐந்து சதவீதம் மாத்திரமே என கருதலாம் எனவும் பேர்ள் புரொடெக்டர்ஸ் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முதிதா கட்டுவால தெரிவித்துள்ளார்.
இந்த செய்தி தொடர்பான மேலதிக விபரங்களுடனும் மற்றும் பல செய்திகளுடனும் வருகின்றது இன்றைய செய்திகளின் தொகுப்பு,