சோமாலியாவை விட மோசமான நிலையில் இலங்கை: பொது மக்கள் ஆதங்கம்(Vedio)
சோமாலியாவை விட மோசமான நிலையில் இலங்கை உள்ளதென பொது மகன் ஒருவர் ஆதங்கம் வெளியிட்டுள்ளார்.
நாட்டின் தற்போதைய நெருக்கடியான சூழ்நிலை தொடர்பில் பொது மக்கள் எமது செய்தி சேவைக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,“நான் 20 வருடங்களாக சவுதி அரேபியாவில் வசித்தேன். அங்குள்ள சூழலுக்கும் இங்குள்ள சூழலுக்கும் நிறைய வித்தியாசம் காணப்படுகின்றது. அத்தியாவசிய பொருட்களின் விலையும் அதிகமாக உள்ளது.
இலங்கை மிக மோசமான நிலையில் உள்ளது. அரசாங்கத்திற்கு எதிராக போராட்டங்கள் செய்தும் எந்த மாற்றமும் ஏற்படவில்லை.பல நாடுகள் நமது நாட்டிற்கு உதவி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது எனினும் இதற்கான தீர்வினை அரசாங்கமே முன்வைக்க வேண்டும்.” என கருத்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,