பெண்களின் உள்ளாடைகளுடன் சிக்கிய இராணுவ சிப்பாய்
ஹொரணை பிரதேசத்திலுள்ள பெண்களின் ஆடை அணிந்த நிலையில் இராணுவ வீரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த இராணுவ முகாமில் கடமையாற்றும் இராணுவ சார்ஜன்ட் ஒருவர் கடந்த 24ஆம் திகதி கைது செய்யப்பட்டதாக அங்குருவாதொட்ட பொலிஸார் தெரிவித்தனர்.
நிகவெரட்டிய பிரதேசத்தை சேர்ந்த 40 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இராணுவ முகாமிற்கு அருகாமையில் வசிக்கும் பெண்ணொருவரின் உள்ளாடைகள் தொடர்ச்சியாக காணாமல் போயுள்ளது.
பெண்ணின் ஆடை
இதனை அவதானித்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வெளியில் தொங்கிக் கொண்டிருந்த பெண்ணொருவரின் உள்ளாடையை குறித்த நபர் வந்து திருடியுள்ளார்.
இதனையடுத்து அந்தப்பகுதி பிரதேசவாசிகள் துரத்திச் சென்று குறித்த நபரை பிடிக்க முற்பட்டுள்ளனர். எனினும் அவர் கம்பி வேலி வழியாக பாய்ந்து இராணுவ முகாமைகிற்குள் தப்பிச் சென்றுள்ளார்.
இதனையடுத்து பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலை அடுத்து குறித்த இராணுவ சிப்பாய் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருடப்பட்ட ஆடை
பொலிஸாரின் சோதனையின் போது, குறித்த நபர் ஒரு பெண்ணின் உள்ளாடைகளை அணிந்திருந்தார். அது வீடொன்றில் திருடப்பட்ட ஆடை என பெண் ஒருவர் அடையாளம் காட்டியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அங்குருவாதொட்ட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
![தையிட்டி விகாரை : என்ன செய்யலாம்](https://cdn.ibcstack.com/article/eafa3708-ce84-4e22-b6a6-518c2b23980b/25-67a890674e00d-md.webp)
தையிட்டி விகாரை : என்ன செய்யலாம் 1 நாள் முன்
![Rasipalan: சனிபகவான் அருளால் பணப்பிரச்சினையே இல்லாமல் வாழப்போகும் 3 ராசிகள்- நீங்க என்ன ராசி?](https://cdn.ibcstack.com/article/2447e761-a722-4acd-b1b0-07f743c6f53e/25-67aa726902460-sm.webp)
Rasipalan: சனிபகவான் அருளால் பணப்பிரச்சினையே இல்லாமல் வாழப்போகும் 3 ராசிகள்- நீங்க என்ன ராசி? Manithan
![சினிமாவில் நடிக்க ஆரம்பிச்சதுமே இப்படியா? எல்லை மீறும் நடிகை ரச்சிதா... கலாய்க்கும் ரசிகர்கள்](https://cdn.ibcstack.com/article/8bb6e760-4ca7-4b4c-8cdd-8d5fa12d8ca1/25-67a97b95dd050-sm.webp)