இலங்கை இந்தாண்டு வங்குரோத்து அடைந்து விடும் - அனுரகுமார தெரிவிப்பு
இலங்கை இந்த வருடத்திற்குள் வங்குரோத்து நிலைமை அடைந்து விடும் என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க கூறியுள்ளார்.
கொழும்பு புதிய நகர மண்டபத்தில் நடைபெற்ற அந்த கட்சியின் கருத்தரங்கில் அவர் இதனை கூறியுள்ளார்.
இலங்கை உட்பட மூன்று நாடுகள் இந்தாண்டில் வங்குரோத்து நிலைமையை அடையும் என சர்வதேச நாணய நிதியம் மதிப்பீடு செய்துள்ளது.
இலங்கையின் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள பிரதான பிரச்சினை கடன் நெருக்கடி. இலங்கை தற்போது கடனை தாங்கிக்கொள்ள முடியாத நிலைமைக்கு சென்றுள்ளது.
அரசாங்கத்தின் அனைத்து வருவாயும் தற்போது கடனை திரும்ப செலுத்த பயன்படுத்தும் நிலைமை ஏற்பட்டுள்ளது. இதனால், மக்களுக்கான அனைத்து சேவைகளை இரத்துச் செய்ய நேரிட்டுள்ளது எனவும் அனுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்

திருமணத்திற்கு ஒப்புக்கொண்ட முத்துவை அசிங்கப்படுத்தும் அருண்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam
