டுபாயில் பணிபுரிந்து இலங்கை திரும்பிய பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
டுபாயில் பணிபுரிந்து வந்த திருமணமான பெண்ணின் அந்தரங்க புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக அச்சுறுத்தி 5 லட்சம் ரூபாவை கப்பம் கோரிய நபரை கைது செய்ய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான விசாரணைகளை கரந்தெனிய பொலிஸார் மேற்கொண்டு வருவதாக அப்பகுதியின் உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
கரந்தெனிய பிரதேசத்தை சேர்ந்த பெண் ஒருவர் செய்த முறைப்பாட்டிற்கமைய, இந்த கைது நடவடிக்கைக்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த பெண் டுபாயில் பணியாற்றும் போது அவருடன் ஏற்பட்ட பழக்கத்திற்கமைய, அவரிடம் அவர் தனிப்பட்ட புகைப்படங்களை பெற்றுக் கொண்டுள்ளார்.
இருவரும் இவ்வருடம் இலங்கைக்கு வந்துள்ளதுடன், குறித்த பெண் தனது திருமணமான கணவருடன் வாழ்ந்து வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
திருமணமான பெண்ணுடன் இணைந்து வாழ்ந்தமைக்காக அவரை பழிவாங்கும் நோக்கில் அம்பலாங்கொட பிரதேசத்தை சேர்ந்த நபர் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி 5 லட்சம் ரூபாய் கோரியுள்ளார்.
இந்த நிலையில் சம்பவம் தொடர்பில் அந்த பெண் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இது தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 2 மணி நேரம் முன்

அந்த முடிவுக்கு வரவில்லை என்றால்... இந்தியா பேரிழப்பை சந்திக்கும்: அமெரிக்கா அடுத்த மிரட்டல் News Lankasri
