அனர்த்தப் பேரழிவுகளால் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 640ஆக அதிகரிப்பு..
நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட அனர்த்தங்களின் ஊடாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 640ஆக அதிகரித்துள்ளது.
மேலும், 211 பேரை இதுவரை காணவில்லை. இன்று(12) 12 மணிக்கு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்த விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
அனர்த்தப் பேரழிவு
மேலும், 473,138 குடும்பங்களைச் சேர்ந்த 1,637,960 பேர் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் தகவலின்படி, கண்டி மாவட்டத்தில் அதிக உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளன.
இதன்படி, கண்டி மாவட்டத்தில் 234 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், நுவரெலியா மாவட்டத்தில் 89 இறப்புகளும், பதுளை மாவட்டத்தில் 90 இறப்புகளும், குருநாகல மாவட்டத்தில் 61 இறப்புகளும், கேகாலை மாவட்டத்தில் 32 இறப்புகளும், புத்தளத்தில் 37 இறப்புகளும், மாத்தளை மாவட்டத்தில் 28 இறப்புகளும் பதிவாகியுள்ளன.
இதேவேளை,26,103 குடும்பங்களைச் சேர்ந்த 82,8138 பேர் இன்னும் தற்காலிக தங்குமிடங்களில் தங்கியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.
தையிட்டி மக்களை அரசியல் இலாபத்திற்காக தவறாக வழி நடத்தும் அர்ச்சுனா எம்.பி! எழுந்துள்ள குற்றச்சாட்டு..
உயிர் கொல்லும் குளிர்... மின்வெட்டால் 600,000 பேர் அவதி: ஆயிரக்கணக்கான விமானங்கள் ரத்து News Lankasri