அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெறாமல் வெளியேறியது இலங்கை அணி..
நடப்பு உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்றில் இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான போட்டியில், நியூசிலாந்து அணி வெற்றிப்பெற்றுள்ளது.
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறுகிறது.
சூப்பர் 8 சுற்றுப் போட்டிகள்
இந்தத் தொடரின் க்ரூப் சுற்று போட்டிகள் நிறைவுபெற்று சூப்பர் 8 சுற்றுப் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
இன்றைய சூப்பர் 8 சுற்றுப் போட்டியில் இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகள் இன்று(25) மோதின. இதுவரை இவ்விறு அணிகளும் ஒரு போட்டியில் விளையாட இருந்தன.

எனினும், நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோத இருந்த போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது.
இதன் காரணமாக இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளி வழங்கப்பட்டுள்ளது.
இலங்கை அணி விளையாடிய முதல் சூப்பர் 8 சுற்று போட்டியில் தோல்வியை தழுவியது. நெட் ரன் ரேட் முறையில் தொடரின் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறும் நோக்கில் இரு அணிகளும் இன்றைய போட்டியில் பலப்பரீட்சை நடத்தின.
நியூசிலாந்து அணி
இந்த நிலையில், இன்றைய போட்டியில் நாணயசுழற்சியில் வெற்றி இலங்கை அணி பந்துவீச்சு தேர்வு செய்தது.
இதனால், முதலாவதாக துடுப்பாட்டம் செய்ய களமிறங்கிய நியூசிலாந்து அணி முதல் இன்னிங்க்ஸ் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 168 ஓட்டங்கள் எடுத்தது. இதில், அதிகபட்சமாக மிச்சல் சான்ட்னர் 47 ஓட்டங்கள் எடுத்தார்.

தொடர்ந்து, ரச்சின் ரவீந்திரா 32, கோல் மெக்கன்சி 31, ஃபின் ஏலன் 23 ஓட்டங்களும் எடுத்தனர். இலங்கை அணி சார்பில் மதிஸ் தீக்சன, துஸ்மந்த சமீர தலா 3 விக்கெட்டுக்களையும் துனித் வெல்லாலகெ 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
இலங்கை அணி
இந்நிலையில், 169 என்கிற வெற்றி இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது.
ஆரம்ப துடுப்பாட்டகாரர்களான பெதும் நிசங்கா ஒரு ஓட்டங்களும் எடுக்காமல் ஆட்டமிழக்க குசல் மெண்டிஸ் 11 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார்.

அதிகபட்சமாக கமிந்து மெண்டிஸ் 31 ஓட்டங்களும், துனித் வெல்லாலகே 29 ஓட்டங்களும், எடுக்க மற்ற அனைவரும் சொற்ப ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தனர்.
நியூசிலாந்து அணி சார்பில் மேட் ஹென்ரி 2 விக்கெட்டுக்களையும்,ரச்சின் ரவீந்திரா 4 விக்கெட்டுக்களையும், மிட்சல் சேண்ட்னர், க்ளென் பிலிப்ஸ் தலா ஒரு விக்கெட்டுக்களையும் எடுத்தனர்.
இதன் முதல் இலங்கை அணியும் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெறாமல் வெளியேறியுள்ளது.
திருமணம் செய்யப்போகும் விஜய் தேவரகொண்டா-ராஷ்மிகா இருவருக்கும் உள்ள வயது வித்தியாசம்... எவ்வளவு தெரியுமா? Cineulagam