தொடரும் நெருக்கடி நிலை.....! இலங்கை வர அச்சப்படும் அவுஸ்திரேலிய வீரர்கள்
மின்வெட்டு மற்றும் பிற பிரச்சினைகளால் மக்கள் அவதிப்படும் நேரத்தில் அவுஸ்திரேலியாவின் கிரிக்கெட் வீரர்கள் இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்வது குறித்து கவலைகளை வெளியிட்டுள்ளனர்.
எப்படியிருப்பினும் அடுத்த மாத சுற்றுப்பயணத்திற்கு முன்னதாக அதிகாரிகள் எடுக்கும் முடிவை தாங்கள் ஆதரிப்பதாக அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் தெரிவித்துள்ளனர்.
பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் அமைதியின்மைக்கு மத்தியில் இலங்கை சிக்கியுள்ள நிலையில், அவுஸ்திரேலிய வீரர்கள் அடுத்த வாரம் பயணிக்கவுள்ளனர்.
இந்த மாதத்தின் ஆரம்பத்தில் இலங்கையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. போராட்டங்கள் வன்முறையாக மாறியது. எனினும் தற்போது கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட நிலையில், அதிகரித்து வரும் பணவீக்கம் மற்றும் முக்கிய வளங்களின் பற்றாக்குறை பிரச்சனைக்குரியதாகவே உள்ளது.
ஏப்ரல் மாதத்தில் நாட்டின் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய்ந்த அவுஸ்திரேலிய கிரிக்கெட் அதிகாரிகள் இலங்கைக்கு பயணம் மேற்கொள்வது பாதுகாப்பானது என உறுதியளித்தனர்,
24 ஆண்டுகளின் பின்னர் இந்த வருடம் அவுஸ்திரேலிய அணி, பாகிஸ்தானுக்கு முதல் சுற்றுப்பயணம் மேற்கொண்டது. எனினும் அங்கு எவ்வித பாதுகாப்பு அச்சுறுத்தல்களும் ஏற்படவில்லை.
எனினும் தற்போதைய சூழ்நிலையில் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வதில் உள்ள நெருக்கடி குறித்து சில வீரர்கள் வருத்தம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
காலி, கண்டி, கொழும்பு ஆகிய மூன்று நகரங்களிலும் கிரிக்கெட் தொடர்கள் இடம்பெற வாய்ப்புகள் உள்ளது.
இரவு நேர போட்டி ஏற்பாடு நடந்திருந்தால் மின்வெட்டினால் அந்த போட்டிகள் பாதிப்படைய கூடும். மேலும் போக்குவரத்து சிக்கல்கள் ஏற்படும் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
எப்படியிருப்பினும் இந்த போட்டிகளை நடத்தினால் இலங்கைக்கு மிக்பெரிய உதவிகள் கிடைக்கும் எனவும் அது இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு உதவும் எனவும் வீரர்கள் எண்ணுவதால் இந்த போட்டிகளில் ஈடுபட தயார் எனவும் அறிவித்துள்ளனர்.





அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 12 மணி நேரம் முன்

புலம்பெயர்தல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் செய்த வேடிக்கை செயல்: கமெராவில் சிக்கிய காட்சி News Lankasri
