தமிழர் பகுதியில் இடம்பெற்ற வெசாக் கொண்டாட்டங்கள்
கௌதம புத்தரின் பிறப்பு, ஞானம் பெறல் மற்றும் பரிநிர்வாணத்தை நினைவு கூரும் உலக பௌத்தர்களின் புனிதமான நாளான வெசாக் தினம் முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பில் வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டிருந்தது.
உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் உள்ள பௌத்தர்கள் விளக்குகளை ஒளிரவிட்டு, வழிபாடுகளுக்கு முன்னுரிமை அளித்து, மிகுந்த பக்தியுடன் இதனைக் வருடம் தோறும் மே மாதம் கொண்டாடி வருகின்றனர்.
வெசாக்தினம்
அந்தவகையில் வெசாக்தினம் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு 59ஆவது காவல் படையினரின் ஏற்பாட்டில் புதுக்குடியிருப்பு பிரதேசசபை மைதானத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டிருந்தது.
குறித்த நிகழ்வில் புத்த பெருமானின் பரிநிர்வாணத்தை நினைவுகூரும் வரலாற்று கதைகள் வெளிச்ச வீடுகளில் தமிழ் மொழியில் ஒலி மூலம் வெளிப்படுத்தப்பட்டதோடு, சில வெளிச்ச வீடுகளில் ஞானம் பெறும் நிலையில் தமிழ் பக்தி பாடல்கள் ஒலிபரப்பப்பட்டிருந்தது.
அத்தோடு குறித்த நிகழ்வில் கலந்து கொண்ட மக்கள் அனைவருக்கும் சிறந்த முறையில் வேறுபாடின்றி இரவு உணவும் வழங்கப்பட்டிருந்தது.
உணவு வழங்கும் நிகழ்வு
குறித்த வெசாக் கொண்டாட்டத்தில் சாதி, மதம், இனம் என்ற வேறுபாடு கடந்து சிறுவர்கள், பெரியோர்கள் என பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு வெசாக் தினத்தினை கொண்டாடியிருந்தனர்.
வெசாக்தினத்தினை முன்னிட்டு இன்றும் (13) உணவு வழங்கும் நிகழ்வு இடம்பெற இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
மட்டக்களப்பு
தேசிய வெசாக் வாரத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு நகரில் நேற்று(12) மாலை பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றதுடன் பொதுமக்களின் வருகை காரணமாக நகருக்குள் போக்குவரத்து நெரிசல்கள் ஏற்பட்டன.
மட்டக்களப்பு தலைமையக பொலிஸாரின் ஏற்பாட்டில் இன்று மாலை மட்டக்களப்பு நகருக்குள் தேசிய வெசாக் வார நிகழ்வுகள் நடைபெற்றன.
சனநெருக்கடி
இதன்போது மட்டக்களப்பு தலைமைய பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக வெசாக் அலங்கார தோரணம் அம்பிட்டிய சுமனரத்ன தேரர் மற்றும் அதிதிகளினால் திறந்துவைக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து மங்கலராம விகாரை வளாகத்தில் மட்டக்களப்பில் உள்ள பொலிஸ் நிலையங்களினால் அமைக்கப்பட்ட வெசாக்கூடுகள் அதிதிகளினால் திறந்துவைக்கப்பட்டது.
அத்துடன் கலந்துகொண்ட பொதுமக்களுக்கான தன்சல் வழங்கும் நிகழ்வும் நடைபெற்றது.
வெசாக் நிகழ்வுகளை காண மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலுமிருந்து பெருமளவான மக்கள் குழுமியதன் காரணமாக அப்பகுதியில் சனநெருக்கடி ஏற்பட்டதுடன் அவற்றினை கட்டுப்படுத்துவதற்கு பொலிஸார் பெரும் பிரயத்தனங்களை முன்னெடுத்ததை காணமுடிந்தது.
தகவல்- கிருஸ்ணகுமார்
மன்னார்
மன்னார் மாதோட்ட ரஜமகா விகாரையில் நேற்றைய தினம் திங்கட்கிழமை (12) மாலை வெசாக் தின நிகழ்வுகள் இடம்பெற்றது.
மாதோட்ட ரஜ மகா விகாரையின் விகாராதிபதி தலைமையில் குறித்த வெசாக் நிகழ்வுகள் இடம்பெற்றது.
இதன் போது பொலிஸார் இராணுவம் பொதுமக்கள் என நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
அதனை தொடர்ந்து கலந்து கொண்டவர்களுக்கு தானம் வழங்கி வைக்கப்பட்டது.
தகவல்- ஆசிக்
சவளக்கடை
தேசிய வெசாக் வாரத்தினை முன்னிட்டு சவளக்கடை பொலிஸ் நிலையம் ஏற்பாடு செய்த விசேட வெசாக் தின நிகழ்வு பொலிஸ் நிலைய வளாகத்தில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஐ.எல்.ஏ.கபூர் தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வின் போது கலந்து கொண்டவர்கள் மற்றும் வீதியால் பயணித்த பயணிகள் உள்ளிட்டோர்களுக்கு மரவள்ளிக் கிழக்கு அன்னதான (தன்ஸல் ) வழங்கி வைக்கப்பட்டது.
வெசாக் போயா தினத்தை முன்னிட்டு பொலிஸ் தலைமை அலுவலகத்தில் வெசாக் கூடுகள் கட்டப்பட்டு அலங்காரங்கள் செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
தகவல்-பாறுக் ஷிஹான்







உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 58 நிமிடங்கள் முன்

சரிகமப Li'l Champs சீசன் 4 திவினேஷ் ஆசையை நிறைவேற்றிய பாடகர் ஸ்ரீநிவாஸ்.. சந்தோஷத்தில் குடும்பம் Cineulagam
