கட்டார் விமானத்தில் பறிபோன இலங்கை வைத்தியரின் உயிர்
அமெரிக்காவில் இருந்து இலங்கைக்கு கட்டார் ஏர்வேஸில் பயணித்த தெற்கு கலிபோர்னியாவில் இருதயநோய் நிபுணராக இருந்த ஒருவர் பயணத்தின் போது விமானத்தில் உயிரிழந்துள்ளார்.
குறித்த வைத்தியர், பயணத்தின் போது விமானத்தில் சைவ உணவு கோரியுள்ள நிலையில் அது மறுக்கப்பட்டுள்ளது.
பின்னர் அவருக்கு இறைச்சியுடன் வழங்கப்பட்ட உணவை அவர் உண்ண முற்பட்ட போது உணவு சிக்கி மூச்சுத் திணறி இறந்ததாக அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளதாக சர்வதேச ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
விமானியின் பொய்யான கருத்து
85 வயதான அசோகா ஜெயவீர என்ற மருத்துவரே அமெரிக்காவில் இருந்து இலங்கைக்கு கட்டார் ஏர்வேஸில் பயணித்த நிலையில் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், விமானம், ஆர்க்டிக் பெருங்கடலிற்கு மேலே பயணித்ததால் அந்த நேரத்தில் அவசர சிகிச்சைக்காக விமானத்தை தரையிறக்க முடியவில்லை என அதன் விமானி குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும், சம்பவம் நடந்த நேரத்தில் விமானம் உண்மையில் மத்திய மேற்குப் பகுதிக்கு மேல் இருந்ததாகவும், எளிதில் திருப்பிவிடப்பட்டிருக்கலாம் என்றும் உயிரிழந்த வைத்தியரின் மகன் குற்றம் சாட்டியதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதனை தொடர்ந்து, விமானம் இறுதியில் ஸ்கொட்லாந்தின் எடின்பர்க்கில் தரையிறங்கியபோது, சைவ உணவு மாத்திரமே உண்பவரான ஜெயவீர, சுமார் மூன்றரை மணி நேரம் மயக்கமடைந்திருந்தார் என்று முறைப்பாட்டில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதன் பின்னரே அவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் ஆனால் ஏற்கனவே அது தாமதமாகியிருந்த நிலையில் அவர் உயிரிழந்து விட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 2 நாட்கள் முன்

அடம்பிடித்த அன்புக்கரிசி.. தயங்கி நிற்கும் அக்கா பாசம்- பேசாமல் ஒதுங்கிய குணசேகரன் குடும்பம் Manithan

மீனாவிற்கு பிரச்சனை கொடுக்க நினைத்து வம்பில் சிக்கிய ரோஹினி, இது தேவையா?.. சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ Cineulagam

குணசேகரன் தலைமையிலேயே பார்கவி-தர்ஷன் திருமணத்தை நடத்தும் ஜனனி... எதிர்நீச்சல் தொடர்கிறது தெறி எபிசோட் புரொமோ Cineulagam
