மக்களின் குறைபாடுகள் தொடர்பில் அமைச்சர் எடுத்துள்ள தீர்மானம் (Photos)
மத்திய மாகாணத்தில் உள்ள நகர, கிராமப் பகுதிகளுக்கு வழங்கப்படும் நீர் இணைப்புகள் மற்றும் நீர்வழங்கல் தொடர்பிலான குறைபாடுகள் தொடர்பில் அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில் ஆராயப்பட்டுள்ளது.
ஜீவன் தொண்டமானுக்கும், மத்திய மாகாண ஆளுநர் லலித் யு.கமகேவுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று அண்மையில் கொழும்பிலுள்ள அமைச்சகத்தில் நடைபெற்றுள்ளது.
இதன்போதே மேற்படி நீர் இணைப்புகள், நீர்வழங்கல் குறித்து ஆராயப்பட்டு தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.
தமிழ்க் கல்வி பிரிவிலுள்ள பிரச்சினைகள்
நாட்டில் தற்போது உள்ளுராட்சிசபைகளின் அதிகாரம், ஆளுநர் வசம் இருப்பதால், கண்டி, நுவரெலியாவில் உள்ள உள்ளுராட்சி சபைகளின் துறைசார் அதிகாரிகளிடம் இது பற்றி பேச்சு நடத்தி, மக்களுக்குத் தடையின்றி நீரை வழங்குவதற்கும் இங்கு தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
இதன்போது, மத்திய மாகாண தமிழ்க் கல்வி பிரிவில் நிலவும் பிரச்சினைகளுக்கு நிச்சயம் தீர்வு வழங்கப்படும் என்று ஆளுநர் அமைச்சரிடம் உறுதியளித்துள்ளார்.
மேலும், இதற்கான விசேட சந்திப்பொன்று எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதன்போது மத்திய மாகாணத்தில் தமிழ்க் கல்வி பிரிவில் நிலவும் பிரச்சினைகள் சம்பந்தமாகவும் சந்திப்பில் எடுத்துரைக்கப்படவுள்ளது.
இந்த சந்திப்பில் அமைச்சின் செயலாளர் வருண சமரதிவாகர, நீர்வழங்கல் அதிகாரசபை நிஷாந்த ரணதுங்க, பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் தலைவர் பாரத் அருள்சாமி, புதிய கிராமங்கள் அதிகார சபையின் பணிப்பாளர் ரூபதரஷ்ன், நீர்வழங்கல் சபையின் பொது முகாமையாளர் உள்ளிட்டோர் சந்திப்பில் பங்கேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 4 நாட்கள் முன்

பாரதி கண்ணம்மா, கல்யாணம் முதல் காதல் வரை குழந்தை நட்சத்திரங்களை நியாபகம் இருக்கா?... எப்படி உள்ளார்கள் பாருங்க, வீடியோ Cineulagam

ஈஸ்வரிக்கு ஆபத்து.. திருமண பிரச்சனைக்கு நடுவில் அடுத்த ஷாக்! எதிர்நீச்சல் தொடர்கிறது ப்ரோமோ Cineulagam
