அடக்குமுறைகளுக்கு எதிரான நடவடிக்கை தொடரும்! ஜீவன் தொண்டமான் அறிவிப்பு(Video)
தொழிலாளர்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்காக மஸ்கெலியா பெருந்தோட்ட நிறுவனத்துக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கை வெற்றியளித்துள்ளது. இது ஆரம்பம் மட்டுமே, கம்பனிகளின் அடக்குமுறைகளுக்கு எதிரான எமது தொழிற்சங்க ஆட்டம் தொடரும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.
மஸ்கெலியா பெருந்தோட்ட நிறுவனத்தின் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் தோட்டங்களில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸால் தொழிற்சங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதற்கு கட்சி, தொழிற்சங்க பேதமின்றி தொழிலாளர்கள் ஓரணியில் திரண்டு ஒத்துழைப்பு வழங்கினர்.
இதனால் தோட்டத்திலிருந்து ஒரு கிராம் தேயிலைகூட வெளியில் செல்லவில்லை. இந்நிலையில் தொழிலாளர்களின் சார்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை ஏற்பதற்கு பெருந்தோட்ட நிறுவனம் இணக்கம் தெரிவித்து, எழுத்துமூல உத்தரவாதத்தை வழங்கியுள்ளது.
தொழிலாளர்களுடன் கலந்துரையாடிய ஜீவன் தொண்டமான்
இதனையடுத்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. இதனையடுத்து மஸ்கெலியா தோட்டப்பகுதிகளுக்கு நேற்று களப்பயணம் மேற்கொண்ட ஜீவன் தொண்டமான், தொழிலாளர்களுடன் கலந்துரையாடி, தொழிற்சங்க நடவடிக்கைக்காக கிடைத்த வெற்றியை பற்றி மக்களுக்கு தெளிவுப்படுத்தினார்.
அதன்பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட அவர்,
மஸ்கெலியா பெருந்தோட்ட நிறுவனத்தின்கீழ் நுவரெலியா மாவட்டத்தில் 10 தொழிற்சாலைகளும், பதுளையில் 3 தொழிற்சாலைகளும் இருந்தன.
இவற்றில் இருந்து கொழுந்தை வெளியில் கொண்டு செல்ல நாம் அனுமதிக்கவில்லை. மஸ்கெலியா பெருந்தோட்ட நிறுவனம், கூட்டு ஒப்பந்தத்தை மதிப்பதில்லை, பேச்சுகளுக்கு வருவதும் இல்லை.
தொழிற்சங்க நடவடிக்கையை அடுத்து பேச்சுக்கு வந்தனர். எழுத்துமூல உத்தரவாதத்தை வழங்கினர். நிலுவை கொடுப்பனவு வழங்கப்படும் எனவும் உறுதியளிக்கப்பட்டுள்ளது.
நாளைக்கும் நிலுவை பணம் கிடைக்கும்.
அனைத்து தொழிற்சங்கங்களும் ஒத்துழைப்பு வழங்கின. நாம் மட்டும் பேர் போட
முடியாது. மக்களின் பிரச்சினை தீர்ந்தால் சரி. இனி நாள் சம்பளமாக ஆயிரம் ரூபா
கிடைக்கும் என்றார்.





வீட்டிலேயே கார்த்திகா கழுத்தில் தாலி கட்ட சென்ற சேரன், சந்தோஷத்தில் குடும்பம், ஆனால்?- அய்யனார் துணை புரொமோ Cineulagam

சீனா, பாகிஸ்தானுக்கு பெரும் பதற்றம்.... ரூ 2,000 கோடியில் ட்ரோன் உற்பத்தியை மேம்படுத்தும் இந்தியா News Lankasri
