இலங்கையில் 30 வருடங்களில் ஏற்பட்டுள்ள மாற்றம்! (Video)
மலையக மக்களின் வருகையுடன் தான் இந்த நாடு பாரிய அபிவிருத்தியடைந்ததாக கண்டி சமூக அபிவிருத்தி நிறுவகத்தின் நிறைவேற்று பணிப்பாளர் பெ.முத்துலிங்கம் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடக நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்ததாவது,
மலையக மக்கள் இந்த நாட்டில் 200 வருட வரலாற்றை கொண்டிருந்தாலும் கூட ஏனைய சமூகங்களோடு ஒப்பிடும் போது, அவர்கள் கல்வி, சுகாதாரம், நிலவுரிமை, வாழ்வுரிமை போன்ற விடயங்களில் 2 நூற்றாண்டுங்கள் கழித்தும் அவர்கள் பின்தங்கிய நிலையிலே வாழ்கின்றனர் என்பது ஓர் வெளிப்படைத் தன்மையென தெரிவித்துள்ளார்.
இவை தொடர்பில் அவர் தெரிவித்த முழுமையான தகவல்களை எமது காணொளியில் காணலாம்,