கடன் பொறிக்குள் சிக்குண்ட இலங்கை! வெளியான தகவல்
ராஜபக்ச அரசாங்கத்தின் சிந்தனையற்ற செயற்பாடு காரணமாக இலங்கை, பாரிய கடன் சுமையில் சிக்கியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா சுட்டிக்காட்டியுள்ளார்.
மக்களுக்கு உணவுப்பொருள் இல்லை. மருந்தில்லை. ஆனாலும் அரசாங்கம் மக்களை கஸ்டத்திற்குள் தள்ளிவிட்டு கடனை அடைப்பதற்கு காசை மிச்சப்படுத்தி வருகின்றது. இதனால் பாதிக்கப்படுவது நாட்டு மக்களே. கடந்த எந்தவொரு அரசாங்கத்திலும் இத்தகைய கஸ்டங்களை மக்கள் அனுபவித்தது கிடையாது என்றும் தெரிவித்துள்ளார்.
இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி, மக்களின் உணவு மற்றும் மருந்துச் செலவிற்கு தேவையான பணத்தினைப் பெற்றுக்கொள்ளுமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கின்றோம் என்றும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான மேலும் பல முக்கிய செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய தினத்திற்கான மாலை நேர முக்கிய செய்திகளின் தொகுப்பு,