கொழும்பு மற்றும் புறநகரங்களில் பயணிகளுக்கு அச்சுறுத்தலாக மாறியுள்ள நபர்
கொழும்பு, களுத்துறை பிரதேசங்களில் பேருந்து மற்றும் தொடருந்து பயணிகளின் பயணப்பொதிகள் மற்றும் கையடக்க தொலைபேசிகளை திருடும் நபர் ஒருவர் 37 மடிக்கணினிகள் மற்றும் கையடக்க தொலைபேசிகளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
களுத்துறை மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவின் தகவலுக்கமைய இந்த கைது சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கைது நடவடிக்கை
தொடருந்து மற்றும் பேருந்து பொதி வைக்கும் இடங்களில் பைகள் மற்றும் மடிக்கணினி பைகளை வைத்துவிட்டு, தூங்கும் பயணிகளை குறி வைத்து, சந்தேக நபர் திருட்டுகளை செய்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சந்தேக நபரிடம் திருடப்பட்ட 32 கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் 5 மடிக்கணினிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், கைது செய்யப்படும் போது அவரிடம் பல சிறிய ஹெரோயின் பொதிகள் இருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
ராஜகிரிய பிரதேசத்தை சேர்ந்த 38 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





தமிழ் இன அழிப்பை கட்டமைத்துள்ள இலங்கை அரசாங்கம் 23 மணி நேரம் முன்

யாரும் எதிர்ப்பார்க்காத நேரத்தில் ஆனந்தி கழுத்தில் தாலி கட்டிய அன்பு... சிங்கப்பெண்ணே பரபரப்பு புரொமோ Cineulagam

இனி 12 மணி நேரத்திற்கு பதில் 2 மணி நேரம் தான்.., ஜப்பானின் அதிவேக புல்லட் ரயில் இந்தியாவில் அறிமுகம் News Lankasri

சன் டிவியில் எதிர்நீச்சல் சீரியலில் இருந்து இந்த பிரபலம் வெளியேறுகிறாரா?.. ரசிகர்கள் ஷாக் Cineulagam
