சுற்றுலா பயணிகள் வருகையில் ஏற்பட்டுள்ள மாற்றம்!
சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
இதற்கமைய, இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 428,197 சுற்றுலாப்பயணிகள் நாட்டுக்குப் பிரவேசித்துள்ளதாக அந்த சபை தெரிவித்துள்ளது.
இதன்படி, ஜனவரி மாதத்தில் மாத்திரம் 252,761 சுற்றுலாப்பயணிகளும் பெப்ரவரி மாதத்தில் இதுவரையான காலப்பகுதியில் 175,436 சுற்றுலா பயணிகளும் நாட்டுக்குப் பிரவேசித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுற்றுலா பயணிகள் வருகை
இதன்படி, இந்தியாவிலிருந்து 25,293 பேரும், ரஷ்யாவிலிருந்து 22,280 பேரும் பிரித்தானியாவிலிருந்து 18,785 பேரும், ஜேர்மனியிலிருந்து 12,393 சுற்றுலாப் பயணிகளும் நாட்டுக்குப் பிரவேசித்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
மேலும், பெப்ரவரி மாதத்தில் இந்தியாவிலிருந்தே அதிகளவிலான சுற்றுலாப்பயணிகள் வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
