இணைய வழி விசா முறைமைக்கு எதிர்ப்பு: நிதிக்குழுவிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
அரசாங்க நிதிக்குழுவின் தலைவர் ஹர்ஷ டி சில்வாவினால், இணைய முறைமை மூலம் சுற்றுலா பயணிகளுக்கு விசா வழங்குவது தொடர்பில் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிதிக்குழுவை பிரதிநிதித்துவப்படுத்தும் 12 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இது தொடர்பில் விளக்கமளித்துள்ளார்.
ஷெஹான் சேமசிங்க, மகிந்தானந்த அளுத்கமகே, வஜிர அபேவர்தன, சுரேன் ராகவன், துமிந்த திஸாநாயக்க, பிரேம்நாத் டொலவத்த, சீதா அரம்பேபொல, அனுப பசகுவல், ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, மதுர விதானகே மற்றும் ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுடன் தாம் உடன்படவில்லை என கூறியுள்ளனர்.
ஹர்ஷ டி சில்வாவிடம் கோரிக்கை
சுற்றுலாப் பயணிகளின் வருகை தொடர்பான புள்ளிவிபரங்கள் முரண்பாடானதாக இருப்பதால் அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்பிப்பதை தாமதப்படுத்துமாறு கோரப்பட்டுள்ளது.

மேலும் நிதிக்குழுவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இது தொடர்பில் ஹர்ஷ டி சில்வாவிடம் எடுத்துரைத்துள்ளதாக மகிந்தானந்த அளுத்கமகே கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
[CU3B2RJ ]
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
முடிவுக்கு வரும் ஈரான் போர் நிறுத்தம்... மத்திய கிழக்கில் படைகளைக் குவிக்கும் அமெரிக்கா News Lankasri
கவனத்தை திருப்ப முயற்சிக்கும் ரஷ்யா., உக்ரைனுக்கு 1.2 லட்சம் ட்ரோன்களை அனுப்பும் பிரித்தானியா News Lankasri
24 மணி நேரத்தில் எந்தக் கப்பலும் கடக்க முடியவில்லை., அமெரிக்காவின் ஹார்முஸ் முற்றுகை தீவிரம் News Lankasri