திருகோணமலை கடற்கரையில் வெளிநாட்டு பெண் சுற்றுலா பயணிகளுக்கு நேர்ந்த கதி(Video)
இலங்கைக்கு வருகைதந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளான இரண்டு பெண்கள் பெரும் சிரமத்தை எதிர்நோக்கிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பான காணொளி ஒன்றும் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளான இரண்டு பெண்கள் நிலாவெளி கடலில் உள்ள தீவுக்கு படகு சவாரி செல்வதற்காக பற்றுச்சீட்டு பெற்றுக் கொண்ட பின்னர் அவர்களுக்கு அங்கு செல்வது பாதுகாப்பு இல்லை என்ற எண்ணம் ஏற்பட்டுள்ளது.
பணத்தை திருப்பி கொடுக்க மறுப்பு
இதனால் பற்றுச்சீட்டை பெற்றுக்கொண்ட காரியாலயத்திற்கு சென்று, பற்றுச்சீட்டுக்கான பணத்தை திருப்பிக் கேட்டுள்ளனர்.
ஆனால் அங்கு பணிபுரியும் ஊழியர்கள் குறித்த பெண்களின் பயத்தை புரிந்து கொள்ளாமல், அவர்களின் பணத்தை திருப்பி கொடுக்காமல் அவர்களுடன் வாய் தர்க்கம் புரிந்துள்ளனர்.
அங்குள்ள ஊழியர்களுக்கு முறையாக ஆங்கிலம் பேச முடியாது, நிலைமையை சாதுரியமாக சமாளிக்கவும் தெரியாது தடுமாறும் நிலையை அவதானிக்க முடிகிறது.
இவ்வாறான ஓர் சூழ்நிலையில் இலங்கைக்கு சுற்றுலா வருபவர்களின் பாதுகாப்பு தொடர்பிலும் குறித்த பெண்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
எனவே இப்படியே சென்றால் இலங்கையின் சுற்றுலாத்துறை பெரும் சிக்கலை சந்திக்க நேரிடும் என்பது சுட்டிக்காட்டப்பட வேண்டிய விடயமாகும்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |




