இலங்கைக்கு படையெடுக்கும் சுற்றுலா பயணிகள்
நாட்டில் கடந்த சில மாதங்களாக சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக ரஷ்யாவில் இருந்து வருகை தரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருவதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை
இதன்படி, இந்த மாதத்தின் இதுவரையில் ரஷ்யாவில் இருந்து 9 ஆயிரத்து 783 பேரும், இந்தியாவில் இருந்து 9 ஆயிரத்து 735 பேரும் ஜேர்மனியில் இருந்து ஆறாயிரத்து 301 பேரும் நாட்டை வந்தடைந்துள்ளனர்.
அந்தவகையில், இந்த மாதத்தின் கடந்த 10 நாள்களில் மாத்திரம் 67 ஆயிரத்து 114 சுற்றுலா பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் கடந்த மாதத்தில் மாத்திரம் 2 லட்சத்து 18 ஆயிரத்து 350 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாகவும் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

ஈழத் தமிழர் விடுதலைக்கு இனிச் செய்ய வேண்டியது என்ன..! 22 மணி நேரம் முன்

8 மடங்கு வேகமாக தாக்கும் ஹைப்பர்சோனிக் ஏவுகணை.., இந்தியாவால் பாகிஸ்தான், சீனாவுக்கு சிக்கல் News Lankasri

படுக்கையில் நெப்போலியன் மகன்... எலும்பும் தோலுமாக மாறியதற்கு என்ன காரணம்? நேரில் சந்தித்த பிரபலம் Manithan

வீட்டிற்குள் வந்த பார்கவி, அடுத்த திட்டத்தை போடும் குணசேகரன், என்ன அது.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
