சீனாவின் மத்திய வங்கியுடன் உடன்படிக்கை செய்யவுள்ள இலங்கை
இலங்கை, சீனாவின் மத்திய வங்கியுடன் அடுத்த வாரத்தில் உடன்படிக்கை ஒன்றை செய்து கொள்ளவுள்ளது. சீனாவின் மக்கள் வங்கியுடன் 1.5 பில்லியன் டொலர்கள் மதிப்பிலான உடன்படிக்கை செய்துகொள்ளப்படவுள்ளது.
ஏற்கனவே இந்த தொகையை இந்தியாவிடம் இலங்கை எதிர்பார்த்தபோதும் அது கிடைக்காது என்ற அடிப்படையிலேயே சீனாவுடன் இந்த உடன்படிக்கை செய்துகொள்ளப்படவுள்ளது.
இந்த நிதியின் மூலம் வெளிநாட்டு ஒதுக்கங்கள் மற்றும் சீனாவில் இருந்து இறக்குமதிகளை உரிய வகையில் செயற்படுத்தல் என்பன மேற்கொள்ளப்படவுள்ளன.
இந்த நிதி மூன்றரை வருடக்காலத்தில் மீண்டும் செலுத்தப்படவுள்ளது. நாணய மாற்று பரிமாற்றத்துக்காக இந்தியாவின் மத்திய வங்கியிடம் 1 பில்லியன் டொலர்களை இலங்கை எதிர்பார்த்தது.
எனினும் அது கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் இல்லை என்ற அடிப்படையிலேயே சீனாவிடம் இது தொடர்பான கோரிக்கை விடுக்கப்பட்டது.




