சவால்களுக்கு மத்தியில் உள்நாட்டுக் கடனை மறுசீரமைக்க தயாராகும் இலங்கை
சவால்களுக்கு மத்தியில் உள்நாட்டுக் கடனை மறுசீரமைக்க இலங்கை தயாராவதாக த ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.
சுதந்திரத்திற்குப் பின்னர் நாட்டில் ஏற்பட்டுள்ள மோசமான பொருளாதாரச் சரிவை எதிர்த்து போராட, இலங்கை தனது வெளிநாட்டு கடனுக்கான சேவையை இடைநிறுத்த முடிவு செய்த ஒரு வருடத்தின் பின்னர் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு
இந்த நிலையில் இருதரப்பு கடனளிப்பவர்கள் சீனாவுக்காக காத்திருக்கும் நிலையிலும், பலதரப்பு கடன் வழங்குபவர்கள் அதே சிகிச்சைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்ற சீனாவின் வலியுறுத்தல்களாலும், இலங்கையின் வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு செயல்முறை தற்போது முட்டுக்கட்டைக்கு உள்ளாகியுள்ளது.
இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தற்போது ஒரு வார காலப் பயணமாக சீனாவுக்குச் சென்றுள்ளார்.
எனினும் இதுவரையில், இலங்கையின் கடன் நிவாரணக் கோரிக்கை குறித்த சீனாவின் நிலைப்பாடு தொடர்பில் உத்தியோகபூர்வ அறிவிப்பு எதுவும் இல்லை என்று த ஹிந்து சுட்டிக்காட்டியுள்ளது.
இதற்கிடையில், உள்நாட்டுக் கடனை மறுசீரமைப்பதற்கான அரசாங்கத்தின் நடவடிக்கை பலரிடையே கவலையை ஏற்படுத்தி உள்ளதாகவும் த ஹிந்து குறிப்பிட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |