இலங்கைக்கு மீண்டும் கிடைக்கும் சர்வதேச நாணய நிதியத்தின் 333 டொலர்கள்
இலங்கையின் விரிவாக்கப்பட்ட நிதி வசதி ஏற்பாட்டின் நான்காவது மதிப்பாய்வை சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாகக் குழு அங்கீகரித்துள்ளது.
இந்த அங்கீகாரம் நேற்று (01.07.2025) வழங்கப்பட்டுள்ளது.
நேற்று, விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் கீழ் இலங்கையின் நான்காவது மதிப்பாய்வை மதிப்பீடு செய்ய சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாகக் குழு திட்டமிடப்பட்டிருந்தது.
4ஆவது மதிப்பாய்வு
இதன் அடிப்படையில் நேற்று கூடிய நிதியத்தின் நிர்வாகக்குழு, அதற்கான அங்கீகாரத்தை வழங்கியது. முன்னதாக, 2025 ஏப்ரல் 25 ஆம் திகதியன்று சர்வதேச நாணய நிதிய பணியாளர்களும் இலங்கை அதிகாரிகளும், இலங்கையின் திட்டத்தின் 4ஆவது மதிப்பாய்வில் பணியாளர் அளவிலான உடன்பாட்டை எட்டினர்.
இந்த மதிப்பாய்வு நிதியத்தின் நிர்வாகக் குழுவால் அங்கீகரிக்கப்பட்டதும், இலங்கைக்கு சுமார் 344 மில்லியன் டொலர்கள் நிதியுதவி கிடைக்கும்.
இதற்கான நிபந்தனையாகவே இலங்கையில் மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் என்ற விடயம் சர்வதேச நாணய நிதியத்தினால் விதிக்கப்பட்டிருந்தமையும், அதனை அரசாங்கம் கடந்த வாரத்தில் மேற்கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பிரபல இயக்குனர் வேலு பிரபாகரன் கவலைக்கிடம்! இறந்துவிட்டதாக பரவிய செய்தி பற்றி குடும்பத்தினர் விளக்கம் Cineulagam

சாட்ஜிபிடி உதவியால் 46 நாட்களில் 11 கிலோ எடை குறைத்த நபர் - என்ன உணவுகள் எடுத்து கொண்டார்? News Lankasri
