இலங்கைக்கு கிடைக்கும் கோடிக்கணக்கான பணம் - பெண்கள் வாழ்வில் ஏற்படவுள்ள மாற்றம்
இலங்கையின் உள்நாட்டு விவசாயம் மற்றும் எரிசக்தி பாதுகாப்பை அதிகரிப்பதற்காக ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தித் திட்டமும் ஜப்பானும் ஒத்துழைப்பு வழங்கி வருகிறது. இதன் ஊடாக 58 ஆயிரம் பெண்கள் மற்றும் இளைஞர்கள் நேரடி பயனை பெறவுள்ளனர்.
அத்துடன் வடமேல் மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள ஒரு லட்சத்து 30 ஆயிரத்திற்கும் அதிகமான பாதிப்புக்குள்ளான சமூகத்தினர் மறைமுகமாகப் பயனடையவுள்ளனர்.
ஐக்கிய நாடுகள் சபையின் அபிவிருத்தித் திட்டம் அந்த மாவட்டங்களில் பாதிக்கப்படக்கூடிய சிறிய விவசாயக் குடும்பங்களுக்கு உதவி வழங்குவதற்காக 118 கோடி ரூபாவையும் வழங்கவுள்ளது.

பொருளாதார நெருக்கடி
நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வுகாணும் வகையில் செயற்படுத்தப்படும் இந்த புதிய வாழ்வாதார திட்டம் நேற்று அலரி மாளிகையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
பிரதமர் தினேஷ் குணவர்தன, இலங்கைக்கான
ஜப்பானிய தூதுவர் மிசுகோஷி ஹிடேகி மற்றும் ஐக்கிய நாடுகளின்
அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் வதிவிடப் பிரதிநிதி அசுசா குபோடா
ஆகியோர் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.
இன்னும் திருந்தாத மயிலின் அப்பா, இப்போது செய்த காரியம், வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri
அந்த நாட்டு அகதிகள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படுவார்கள்... ஜேர்மன் சேன்சலர் திட்டவட்டம் News Lankasri
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri
பிரித்தானியாவின் மிகப்பெரிய பணக்காரர் காலமானார்: வணிக சாம்ராஜ்யத்தை உருவாக்கிய இந்தியர் News Lankasri