பாரிய பேரழிவில் மூழ்கவுள்ள இலங்கை! பொது சுகாதார ஆய்வாளர்கள் சங்கம் விடுத்துள்ள தகவல்
கோவிட் தொற்றின் டெல்டா மாறுபாட்டின் அடிப்படையில் நாடு பாரிய பேரழிவில் மூழ்குவதைத் தடுக்க அரசாங்கம் கடுமையான பயணக்கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என்று பொது சுகாதார ஆய்வாளர்கள் சங்கம் வலியுறுத்தியது.
சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன இந்த வலியுறுத்தலை விடுத்துள்ளார்.
களத்தில் நிலைமை மிகவும் ஆபத்தானதாக மாறியுள்ளது. கோவிட் தொடர்பில் அரசங்கத்திடம் தெளிவான மூலோபாயம் இல்லை என்று தெரிகிறது.
அரசாங்கத்தில் சில பொறுப்பானவர்கள், நாட்டில் அதிக தொற்று நோயான டெல்டா மாறுபாடு பரவுவதைப் பற்றி கூறும் டெல்டாவை தாக்கி நொறுக்கும் கதைகளில் இருந்து இதனை தெரிந்துக் கொள்ள முடிகிறது.
நாளாந்த தொற்றாளர் எண்ணிக்கை 3,500 ஐத் தாண்டினால், சுகாதாரத் துறை மோசமாக பாதிக்கப்படும். அத்துடன் நிலைமை மிகக் கடினமான நிலையை அடைந்து கட்டுப்பாட்டை மீறிவிடும் என்று அவர் எச்சரித்துள்ளார்.
எனவே, நிலைமை கைமீறிப் போவதற்கு முன்பே கடுமையான பயணக் கட்டுப்பாடுகளை விதிப்பது மிகவும் முக்கியம் என்று உபுல் ரோஹன கூறியுள்ளார்.
பல்பொருள் அங்காடிகள், பூங்காக்கள் மற்றும் பொது இடங்களில் சுகாதார வழிகாட்டுதல்கள் மற்றும் நடைமுறைகளை புறக்கணித்து மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.
அண்மைய நாட்களில் பொது சுகாதார அதிகாரிகள் எட்டு பேர் கோவிட் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர் என்றும் உபுல் ரோஹன தெரிவித்தார்.