சுதந்திர வர்த்தக உடன்படிக்கை தொடர்பில் இலங்கை – தாய்லாந்து இடையில் பேச்சுவார்த்தை
இலங்கைக்கும் தாய்லாந்திற்கும் இடையிலான உத்தேச சுதந்திர வர்த்தக உடன்படிக்கை தொடர்பான ஐந்தாம் சுற்றுப் பேச்சுவார்த்தை கொழும்பில் நடைபெறவுள்ளது.
இப்பேச்சு வார்தையானது வௌிவிவகார அமைச்சில் நாளை மறுதினம் (28.08.2023) இந்த பேச்சுவார்த்தை ஆரம்பமாகவுள்ளது என தெரிவித்துள்ளனர்.
பேச்சுவார்த்தையின் உள்ளடக்கம்
இந்த பேச்சுவார்த்தையில் அரசியல், வர்த்தகம், முதலீடு, மூல விதிகள், வர்த்தக வசதி மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு ஆகிய துறைகள் தொடர்பில் இங்கு விசேட கவனம் செலுத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தாய்லாந்தின் வெளியுறவுத்துறை நிரந்தர செயலாளர் பங்கேற்கவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த பேச்சுவார்த்தைகளின் மூலம் இரு நாடுகளுக்குமிடையிலான வரலாற்று ரீதியிலான இராஜதந்திர உறவுகளை மேலும் வலுப்படுத்தவும் மற்றும் ஏற்றுமதியை மேம்படுத்துவதன் மூலம் சர்வதேச வர்த்தகத்தில் பெரும் முன்னேற்றத்தை அடையவும் அரசாங்கம் எதிர்பார்க்கின்றது என குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





நேருக்கு நேர் மோதவிருந்த விமானங்கள்: 300 அடி கீழ் நோக்கி பாய்ந்த விமானம்! திக் திக் நொடிகள்! News Lankasri

சீனாவிற்கு கடும் பின்னடைவு... ஜி ஜின்பிங்கின் திட்டத்தைக் கெடுத்த ட்ரம்பின் ஒற்றை முடிவு News Lankasri
