ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவன தலைவர் பதவி நீக்கம்
ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தின் தலைவர் ரொஹான் பெர்னாண்டோ பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
பெர்னாண்டோவை நீக்குவதற்கான தீர்மானம் நிறுவனப் பணிப்பாளர் சபையினால் எடுக்கப்பட்டுள்ளது.
முன்னணி தேயிலை ஏற்றுமதியாளரான ரோஹான் பெர்னாண்டோ 2020 இல் டெலிகொம் தலைவராக நியமிக்கப்பட்டார்.
புதிய தலைவர் நியமனம்
இதேவேளை, ஸ்ரீலங்கா டெலிகொம் பிஎல்சி சபையின் உறுப்பினரான ரியாஸ் மிஹலர் நிறுவனத்தின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனம் தனியார் மயப்படுத்தப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையிலேயே இந்த பதவி மாற்றங்களும் நிகழ்ந்துள்ளன.
பணிப்பாளர் சபை சதி
'இலாபம் தரும்' அரசுக்கு சொந்தமான நிறுவனத்தை உடனடியாக விற்பனை செய்வதற்கு வசதியாகவே தாம் ஒரு 'பணிப்பாளர் சபை சதி' மூலம் தான் நீக்கப்பட்டதாக ஸ்ரீலங்கா டெலிகொம் தலைவர் ரொஹான் பெர்னாண்டோ குற்றஞ்சாட்டியுள்ளார்.
இது தொடர்பில் வெளியான ஒரு ஊடக வெளியீட்டில், நிறுவனத்தின் ஒழுங்குகளுக்கு இணங்க புதிய நியமனம் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட ரொஹான் பெர்னாண்டோ சபையின்
நிறைவேற்று அல்லாத பணிப்பாளராக தொடர்ந்தும் அங்கம் வகிப்பார் என்றும்
அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

இந்த மாதங்களில் பிறந்த ஆண்கள் திருமணத்தின் பின் கோடிஸ்வரயோகம் பெறுவார்களாம்! நீங்க எந்த மாதம்? Manithan

ஜீ தமிழில் சரிகமப-டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சிகளின் மகா சங்கமம்... மேடையில் நடந்த எமோஷ்னல் சம்பவம் Cineulagam
