தொண்டைமானாறு வெளிக்கள நிலையத்தின் பரீட்சை குறித்து இலங்கை ஆசிரியர் சங்கம் முறைப்பாடு
கல்வியமைச்சினதோ அல்லது வடமாகாண கல்வியமைச்சின் செயலாளரின் அனுமதியின்றி முறையற்ற விதமாக தொண்டைமானாறு வெளிக்கள நிலைய பரீட்சையை நடாத்தும் பாடசாலைகளின் அதிபர்களின் செயற்பாடுகள் குறித்தும் வடமாகாண கல்வியமைச்சின் செயலாளருக்கு இலங்கை ஆசிரியர் சங்கத்தால் முறைப்பாடொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
குறித்த முறைப்பாட்டில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, அண்மைக்காலமாக அரசார்பற்ற நிறுவனமாக பதிவு செய்யப்பட்டுள்ள தொண்டைமானாறு வெளிக்கள நிலையம், ஆரம்பகால நோக்கங்கள் மற்றும் குறிக்கோள்களிலிருந்து விலகி, வெறுமனே பரீட்சைகள் மூலம் இலாபமீட்டும் நோக்கில் - முறைகேடுகள் நிறைந்த நிறுவனமாக செயற்பட்டு வருகிறது.
நடைமுறைப்படுத்தப்படும் செயற்பாடுகள்
அந்நிறுவனத்தின் முறையற்ற செயன்முறைகள், பாடசாலைகளில் செயற்படுத்தப்படுவதை கட்டுப்படுத்துமாறு எழுத்துமூலமான கோரிக்கைகளையும் முன்வைத்திருந்தோம்.
முறைகேடுகள் நிறைந்த குறித்த நிறுவனத்தின் செயற்பாடுகள் பாடசாலைகளில் ஊக்குவிக்கப்படக்கூடாது என்பதன் அடிப்படையில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில், இலங்கை ஆசிரியர் சங்கம் முறைப்பாடு மேற்கொண்டதன் அடிப்படையில், குறித்த நிறுவனத்தினால் பாடசாலைகளுக்குள் நடைமுறைப்படுத்தப்படும் முறையற்ற செயற்பாடுகளை கட்டுப்படுத்துவது என வடமாகாண கல்வி அமைச்சு மற்றும் வடமாகாண கல்வி திணைக்களம் என்பன இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு முன்னிலையில் இணக்கப்பாட்டை எட்டியிருந்தன.

ஆயினும் - அரச சார்பற்ற நிறுவனமாக பதிவு செய்யப்பட்டுள்ள தொண்டைமானாறு வெளிக்கள நிலையத்தின் பரீட்சைகளை சில அரச பாடசாலை அதிபர்கள், குறித்த நிறுவனத்துக்கு பரீட்சைக் கட்டணத்தினையும் செலுத்தி பாடசாலை நேரத்தில் முறையற்ற விதமாக செயற்படுத்துகின்றனர்.
குறித்த நிறுவனத்தின் பரீட்சைகள் பாடசாலை நேரத்தில் நடத்தும் போதும் - வடமாகாண கல்வியமைச்சு தொடர்ந்தும் நடவடிக்கை எடுக்காமல் இருப்பதானது வடமாகாண கல்வி அதிகாரிகள் மட்டில் எமக்கு பாரிய அதிருப்தியை ஏற்படுத்துவதோடு, பாரிய சந்தேகத்தையும் ஏற்படுத்துகின்றது.
சகல வலயக் கல்விப் பணிப்பாளருக்கும் 31.12.2025ஆந் திகதியும் NP/20/ED/Thirteen/01/2025 இலக்க வடக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளரின் கடித மூலம், தரம் 12 (2027 Batch)) முதலாம் தவணைப் பரீட்சை என்ற தலைப்பில் வெள்ள அனர்த்தம் காரணமாக பாடசாலைகள் இயங்காததால் மாணவர்களுக்கான பாடத்திட்ட முன்னேற்றம் பாடசாலைக்கு பாடசாலை வேறுபடுவதனால் தரம் 12 இற்கான முதலாம் தவணைப் பரீட்சையை பாடசாலை மட்டத்தில் கணிப்பீட்டு முறையில் நடாத்தி பின்னூட்டலை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.

உயிர் கொல்லும் குளிர்... மின்வெட்டால் 600,000 பேர் அவதி: ஆயிரக்கணக்கான விமானங்கள் ரத்து News Lankasri
ரீ-ரிலீஸில் கெத்து காட்டும் அஜித்தின் மங்காத்தா படம்... இதுவரை எவ்வளவு கலெக்ஷன் தெரியுமா? Cineulagam