அரச ஊழியர் சம்பளம் தொடர்பில் வெடிக்கவுள்ள போராட்டம்! கோட்டாபயவுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை
தற்போது அரச ஊழியர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் ஆசிரியர்களுக்கு போதாது, ஆகவே சம்பள பிரச்சினை தொடர்பில் மீண்டும் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை ஆரம்பிக்கவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இணைய ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

சொகுசு வாழ்க்கை வாழும் அரசியல்வாதிகள்
அவர் மேலும் கூறுகையில், நாட்டில் பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்திய அரசியல்வாதிகள் தற்போது மக்களின் வரிப்பணம் மூலம் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். மக்கள் வாழ்வதற்கான உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளன.
இவற்றுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் மக்கள் ஆர்ப்பாட்டங்களை அடக்குவதன் மூலம் எந்த சந்தர்ப்பத்திலும் அரசியல்வாதிகள் வெற்றியடைய முடியாது.
ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்தில் போராட்டங்கள் இந்த முறைமைகளை மாற்றியமைக்கும்.

கோட்டாபயவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை
மக்கள் எதிர்ப்புக்கு மத்தியில் தப்பியோடிய கோட்டாபய ராஜபக்ச, மீண்டும் நாட்டுக்கு வந்து நாட்டு மக்களின் வரிப்பணத்தில் தஞ்சமடைந்திருப்பது மற்றும் அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்காமல் இருப்பது தொடர்பில் எதிர்வரும் நாட்களில் சட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு நானும் எமது குழுவினரும் தயாராகி வருகின்றோம்” என தெரிவித்துள்ளார்.
10 ஆண்டுகள் கழித்து சொந்த ராசியில் நுழையும் ராகு! பணத்தை மூட்டைகளில் அள்ளப்போகும் 3 ராசிகள் Manithan
ரீமேக் செய்யப்படும் விஜய் டிவியின் சூப்பர்ஹிட் சீரியல்.. அதில் யார் ஹீரோவாக நடிக்கிறார் தெரியுமா? Cineulagam
வெங்கட் பிரபு படத்திற்காக சம்பளத்தை குறைத்துக் கொண்டாரா நடிகர் சிவகார்த்திகேயன்... எத்தனை கோடி தெரியுமா? Cineulagam