மண்டபம் முகாமில் விடுதலைப் புலிகளின் தலைவரின் பிறந்தநாள் கொண்டாட்டம் (Video)
மண்டபம் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் தங்கியுள்ள மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் 67வது பிறந்த நாளையொட்டி கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.
விடுதலைப் புலிகள் தலைவர் வே.பிரபாகரனின் பிறந்த நாளை இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் தங்கியுள்ள இலங்கை தமிழ் மக்கள் ஆண்டு தோறும் கொண்டாடுவது வழக்கம்.
அதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டும் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் 67வது பிறந்த நாளை மண்டபம் முகாமில் நேற்று வெள்ளிக்கிழமை (26) இரவு கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.
மண்டபம் இலங்கை தமிழர் முகாம் வளாகத்தில் தமிழீழ தேசியத்தலைவர் பிரபாகரன் என்ற புகைப்படத்தை அச்சிட்டு கேக் வெட்டி குழந்தைகளுக்கு வழங்கி கொண்டாடியுள்ளனர்.
அப்போது பிரபாகரன் வாழ்க, அவரின் புகழ் வளர்க என்று அவர்கள் முழக்கங்கள் எழுப்பியிருந்தனர்.
அமைதியான முறையில் நடைபெற்ற இந்த பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தை மத்திய மாநில உளவுத்துறை அதிகாரிகள் கண்காணித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


ரபேல் போர் விமானத்திற்கு பின்னடைவா? பங்கு சந்தையில் முந்தும் சீனாவின் J-10 போர் விமானம் News Lankasri
