வெளிநாடொன்றிருந்து நாடு கடத்தப்படவுள்ள ஈழத்தமிழ் இளைஞன்
அவுஸ்திரேலியாவில் இருந்து ஈழத்தமிழ் இளைஞன் ஒருவர் நாடு கடத்தப்படவுள்ளார்.
அகதி கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில் எதிர்வரும் 23ஆம் திகதி அவர் நாடு கடத்தப்படவுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
அதற்கான நடவடிக்கையை அவுஸ்திரேலிய எல்லை பாதுகாப்பு படை முன்னெடுத்து வருவதாக உள்துறை அமைச்சை மேற்கோள் காட்டி இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
நாடு கடத்தல்
2012ஆம் ஆண்டு படகு மூலம் அவுஸ்திரேலியாவுக்கு சென்ற வவுனியாவை சேர்ந்த இளைஞனே இவ்வாறு நாடு கடத்தப்படவுள்ளார்.
அகதி முகாமில் அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில், குடிவரவு சட்டத்திற்கு அமைய நாடு கடத்தப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
புகலிட கோரிக்கை
இலங்கையில் தனக்கு உயிர் அச்சுறுத்தல் உள்ளதாக அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரிய நிலையில் அது நிராகரிக்கப்பட்டுள்ளது.
இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட பல போராட்டங்களில் குறித்த இளைஞன் பங்கேற்றிருந்ததாக குறிப்பிடப்படுகிறது.
You may like this,





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 2 நாட்கள் முன்

அய்யனார் துணை சீரியல் நடிகர் சோழனுக்கு நிஜ வாழ்க்கையில் இப்படியொரு சோகமா?... கண்ணீரில் அரங்கம், வீடியோ Cineulagam

கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் வழுக்கி விழுந்த தமிழ், பதறி அடித்து ஓடிய சேது... சின்ன மருமகள் பரபரப்பு புரொமோ Cineulagam

குப்பையில் இருந்து சாப்பிட்டு.., அம்பானி திருமணத்தில் வேலை செய்து ரூ.50 சம்பாதித்த நடிகை யார்? News Lankasri
