பொருளாதார நெருக்கடியிலிருந்து வெளியேற இஸ்லாமிய நாடுகளின் ஆதரவை நாடும் இலங்கை
இலங்கை, தமது வரலாற்றில் மிக மோசமான பொருளாதார நெருக்கடியிலிருந்து வெளியேற இஸ்லாமிய நாடுகளின் ஆதரவையும் முதலீட்டையும் நாடுவதாக அரப் நியூஸ் செய்திச்சேவை தெரிவித்துள்ளது.
இலங்கையின் வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி, சவூதி அரேபியாவிற்கு பயணம் மேற்கொண்டு, சவூதி அரேபிய இளவரசர் பைசல் பின் ஃபர்ஹான் மற்றும் இஸ்லாமிய மேம்பாட்டு வங்கியின் மூத்த அதிகாரிகள் உட்பட இராஜ்யத்தில் உள்ள சர்வதேச அமைப்புகளின் உயர் அதிகாரிகள் மற்றும் தலைவர்களை சந்தித்துள்ளார்.

பொருளாதார ஆதரவு
ஜெட்டாவில் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் செயலாளர் ஹிஸைன் பிரஹிம் தாஹாவை சந்தித்த போது, உறுப்பு நாடுகளிடம் இருந்து மனிதாபிமான மற்றும் பொருளாதார ஆதரவை அமைச்சர் சப்ரி கோரியுள்ளார்.
1969இல் நிறுவப்பட்ட இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு, 2 பில்லியனுக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட 57 உறுப்பு நாடுகளைக் கொண்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் பெரும்பான்மையான பௌத்த நாடாக இருந்தாலும், இஸ்லாமிய உலகத்துடனான இலங்கையின் உறவுகள் நீண்ட காலமாக தொடர்வதாக சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஈரானின் அபாயகரமான எதிரிகளின் பகுதியில் அற்புதமான மீட்பு நடவடிக்கை: மார்தட்டிக்கொண்ட ட்ரம்ப் News Lankasri
48 மணி நேரத்தில் நரக மழை பொழியும் - ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை News Lankasri
மூன்று நாட்களுக்கான உணவை சேமித்து வைத்துக்கொள்ளுங்கள்: பிரித்தானியர்களுக்கு அறிவுறுத்தல் News Lankasri
தமிழ் புத்தாண்டு சிறப்பு திரைப்படம்.. கலைஞர் டிவியில் முதல் முறையாக ஒளிபரப்பாகும் முன்னணி ஹீரோவின் படம் Cineulagam