இலங்கையிலுள்ள சூப்பர் மார்கெட்களுக்கு நடைமுறையாகும் புதிய சட்டம்
நாடளாவிய ரீதியில் அமைந்துள்ள சூப்பர் மார்க்கெட்களில் வாடிக்கையாளர் பாதுகாப்பு திட்டங்களும் பயிற்சி திட்டங்களும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதன் பணியாளர்கள் தொடர்பில் புதிய சட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அதற்கமைய, இப்பயிற்சி அடுத்த வாரம் முதல் ஒன்லைன் முறை மற்றும் பணியாளர்கள் மற்றும் நிறுவனங்களின் தலைவர்களுக்கான பயிற்சி மையங்களில் தொடங்கப்பட உள்ளது.
வாடிக்கையாளரை மதித்து அவர்களுக்கு தேவையான சேவையை நிறுவன வளாகத்தில் வழங்க சிறப்பு பயிற்சி தயார் செய்யப்பட்டுள்ளது.
சூப்பர் மார்க்கெட்
கடந்த வெள்ளிக்கிழமை 22ஆம் திகதி பொரளையில் உள்ள சூப்பர் மார்க்கெட் ஒன்றில் பெண் ஒருவரை கொடூரமான முறையில் தாக்கிய சம்பவம் பதிவாகியுள்ளது.
இதையடுத்து, சூப்பர் மார்க்கெட்களில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளன.
அந்த சம்பவத்திற்குப் பிறகு, பல சூப்பர் மார்க்கெட்டுகள் நிறுவனத்தின் சீருடையில் அல்லது வேறு இடங்களில் பிரச்சினைக்குரிய வகையில் நடந்து கொள்ளும் ஊழியர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளன.
விசேட பயிற்சி
பணி புரியும் உத்தியோகத்தர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவருக்கும் இந்த விசேட பயிற்சியை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் சூப்பர் மார்க்கெட்கள் வைத்திருக்கும் நிறுவனங்கள் பல புதிய பயிற்சியாளர்களுக்கும் இந்த விசேட பயிற்சியை வழங்க தீர்மானித்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.