46 மில்லியன் ரூபாவை இழக்கும் இலங்கை
வேலைநிறுத்தம் காரணமாக மொத்த தேசிய உற்பத்தியில் நாளொன்றுக்கு 46 பில்லியன் ரூபாவை நாடு இழப்பதாக நிதி இராஜாங்க அமைச்சர் கலாநிதி ரஞ்சித் சியம்பலாபிடிய தெரிவித்தார்.
வேலை நிறுத்தம் காரணமாக கல்விக்கு ஏற்படும் பாதிப்பு கணக்கிட முடியாதளவுக்கு உயர்ந்த மட்டத்தில் காணப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
இச்சந்தர்ப்பத்தில் செய்ய வேண்டியது வேலை நிறுத்தத்தை விட வேலை செய்யும் நாட்டை உருவாக்கி, மீண்டும் நாட்டை வழமையான நிலைமைக்கு கொண்டு வருவதாகும் எனவும் அவர் தெரிவித்தார்.
நாடும் பெருளாதாரமும் மீண்டும் வீழ்ச்சியடையும்
தற்போது காணப்படும் அனைத்து சவால்களுக்கும் முகம் கொடுத்து ஒரு நாடாக, மெல்ல மெல்ல எழுச்சி பெற்று வரும் சந்தர்ப்பத்தில், இவ்வாறான அடிப்படையற்ற வேலை நிறுத்தத்தை மேற்கொண்டால் நாடும் பொருளாதாரமும் மீண்டும் வீழ்ச்சி அடைவதை தடுக்க முடியாதெனவும் அவர் தெரிவித்தார்.
கடந்த காலம் முழுவதும் பல அழிவுகள் ஏற்பட்டாலும் அரச சேவைக்கு வழங்கும் எதனையும் குறைக்கவில்லை. அவர்கள் முகங் கொடுக்கக்கூடிய அனைத்து சலுகைகளையும் முதற் சந்தர்ப்பத்திலேயே பெற்றுக் கொடுத்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
மொத்த தேசிய உற்பத்தி வருடத்திற்கு16,669 பில்லியன் ரூபாவாகும் . அதனை 365 ஆல் பிரித்தால் 46 பில்லியன் ரூபா ஒருநாள் மொத்த தேசிய உற்பத்தி.
ஒரு நாள் முழுவதும் செயலிழக்கச் செய்தால் நாளொன்றுக்கு மொத்த தேசிய உற்பத்தியில் 46 பில்லியன் ரூபாய் இழக்கப்படுகிறது.
கல்வி, இதில் கணக்கிடப்படுவதில்லை. அதை கணக்கிட முடியாது. அதனை நாளைய தினம் உருவாக்க முடியாது போனால், எழுச்சி பெற்று வரும் நாட்டுக்கு இந்த நடவடிக்கைகள் பொருத்தமானதா இல்லையா என நாம் சிந்திக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.