இலங்கை மத்திய வங்கியின் தங்க கையிருப்பில் புதிய நெருக்கடி
இலங்கை மத்திய வங்கியின் தங்க கையிருப்பு முடியும் தருவாயில் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அந்நிய செலாவணி கையிருப்பு சிக்கல் காரணமாக கடந்த மாதம் மத்திய வங்கி ஒரு தொகுதி தங்க கையிருப்பினை விற்பனை செய்துள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் மத்திய வங்கியிடம் 175 மில்லியன் டொலர் தங்க கையிருப்பு காணப்பட்டதாகவும், அது கடந்த மாதம் 92 மில்லியன் டொலராக குறைவடைந்தது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 2021ம் ஆண்டு டிசம்பர் மாதத்திலும் தங்க கையிருப்பு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
கடந்த டிசம்பர் மாத இறுதியில் இலங்கை மத்திய வங்கியிடம் 3.1 தொன் எடையுடைய தங்கம் கையிருப்பில் இருந்த போதிலும், ஜனவரி மாதமும் தங்கம் விற்பனை செய்த காரணத்தினால் தற்போதைய கையிருப்பு 1.6 தொன்னாக குறைவடைந்துள்ளது என தெற்கு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

யாழ்.மண்ணில் சாத்தான் அநுரகுமார திசாநாயக்க ஓதும் வேதம் 19 மணி நேரம் முன்

சொந்த ஊரில் இருக்கும் நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தியின் அழகிய வீட்டை பார்த்துள்ளீர்களா?- இதோ பாருங்கள் Cineulagam

மனைவியை விட்டுவிட்டு உக்ரைன் அழகியுடன் ஓட்டம் பிடித்த பிரித்தானியர்... நாடுகடத்த விரும்பும் மக்கள் News Lankasri
