கோவிட் -19 சவால்களை எதிர்கொள்ள ஒத்துழைப்பை கோரும் இலங்கை!
கொரோனா வைரஸுடன் தொடர்புடைய சவால்களை எதிர்கொள்ள அரசாங்கங்களுக்கு இடையில் மேம்பட்ட ஒத்துழைப்புக்கு இலங்கை அழைப்பு விடுத்துள்ளது.
சாலை ஒத்துழைப்பு தொடர்பான ஆசிய-பசிபிக் உயர் மட்ட மாநாட்டில் உரையாற்றிய இலங்கையின் வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்தன, கோவிட் -19 சவால்களை எதிர்கொள்வதில் அரசாங்கங்கள் மத்தியில் மேம்பட்ட ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்,
இதில் தடுப்பூசிகளை உலகளாவிய பொது சுகாதார நலன்களாக அங்கீகரிப்பது உட்பட விடயங்களும் அடங்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
வைரஸை எதிர்த்துப் போராடுவதற்கான ஒருங்கிணைந்த முயற்சிகள், தொற்றுநோயிலிருந்து விரைவாக மீட்பது மற்றும் மக்களை மையமாகக் கொண்ட வளர்ச்சி ஆகியவை எதிர்காலத்தில் பொருளாதார முன்னேற்றத்திற்கு பயனுள்ளதாக இருக்கும்.
இந்தநிலையில் முக்கியமான வளர்ச்சியில் முதலீடு செய்வதற்காக இலங்கையில் கிடைக்கும் வாய்ப்புகளைப் பெற்றுக்கொள்ள அனைத்து நாடுகளுக்கும் அவர் அழைப்பு விடுத்தார்.
கொழும்பு துறைமுக நகரம், கொழும்பு மற்றும் ஹம்பாந்தோட்டையில் உள்ள துறைமுக உள்கட்டமைப்பு மற்றும் முக்கிய தொழில்துறை மண்டலங்களை அவர் இதன்போது குறிப்பிட்டார்.
ஆசிய-பசிபிக் பகுதி மற்றும் பிற நாடுகளைச் சேர்ந்த பிரமுகர்கள் மற்றும்
சர்வதேச மற்றும் பிராந்திய அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்ற இந்த
மாநாட்டிற்கு சீனாவின் வெளியுறவு அமைச்சர் தலைமை தாங்கினார்.

வினோதினி சீரியலை தொடர்ந்து சன் டிவியில் வரப்போகும் புதிய தொடர்.. நாயகி இவரா, படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam

அதிரடியில் இறங்கிய ஆனந்தி.. உண்மையை எப்படி கண்டுபிடித்தார் பாருங்க! சிங்கப்பெண்ணே நாளைய ப்ரோமோ Cineulagam

ரபேல் போர் விமானத்திற்கு பின்னடைவா? பங்கு சந்தையில் முந்தும் சீனாவின் J-10 போர் விமானம் News Lankasri
