இலங்கையின் இரண்டாவது நானோ செயற்கைக்கோள் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது!
Arthur C Clarke Institute for Modern Technologies இன் பொறியாளர்களின் தொழில்நுட்ப உதவியுடன் வடிவமைக்கப்பட்ட இரண்டாவது நானோ செயற்கைக்கோள் வியாழக்கிழமை (24) சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டது.
Kitsune நானோ செயற்கைக்கோள் வடிவமைக்கப்பட்டு, ஐந்து தரப்பு சர்வதேச கூட்டுத் திட்டத்தின் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) இருந்து அதன் சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டதாக Arthur C Clarke Institute for Modern Technologies (ACCIMT) தெரிவித்துள்ளது.
இலங்கை நேரப்படி சுமார் 17.41 மணிக்கு செயற்கை கோள் அதன் சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து 400 கிலோமீற்றர் தொலைவிலுள்ள சுற்றுப்பாதையில் Kitsune நானோ செயற்கைக்கோள் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
Kitsune நானோ செயற்கைக்கோள் பிப்ரவரி 18, 2022 அன்று சிக்னஸ்-17 ராக்கெட் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ISS) நாசாவுடனான வணிக மறுவிநியோக சேவைகள் (CRS-2) ஒப்பந்தத்தின் கீழ் விண்ணில் செலுத்தப்பட்டது.
கிட்சூன் கியூடெக் (நோடல் பார்ட்னர்) மற்றும் சிங்கப்பூர் நன்யாங் பல்கலைக்கழகம், அட்னிக்ஸ் கார்ப்பரேஷன், ஜப்பான், ஹராடா சீக்கி கார்ப்பரேடின், மற்றும் ஏசிசிஎம்டி ஆகிய கூட்டாளர்களால் இந்த செயற்கை கோள் வடிவமைக்கப்பட்டிருந்தது.
Arthur C Clarke நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட முதல் நானோ செயற்கைக்கோள், ராவணா-01, ஜூன் 17, 2019 அன்று சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து சுற்றுப்பாதைக்கு அனுப்பப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 2 நாட்கள் முன்
இந்தியாவில் குவிய போகும் கோடிகள்; இந்தியா - ஐரோப்பா FTA ஒப்பந்தத்தில் எந்த துறைகளுக்கு லாபம்? News Lankasri
இங்கிலாந்தில் கண்டுபிடிக்கப்பட்ட இரண்டாம் உலகப்போர்க்கால குண்டுகள்: 5,000 பேர் வெளியேற்றம் News Lankasri