தனியார் மயப்படுத்தப்படும் பொது நிறுவனங்கள்: சுரேஷ் பிரேமச்சந்திரன் குற்றச்சாட்டு (Video)
இந்த அரசாங்கம் பல முக்கியமான பொது நிறுவனங்களை தானியார் மயப்படுத்துவதில் மாத்திரமே அக்கறையாக இருக்கின்றார்கள் என ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
நேற்றைய தினம் (17.06.2023) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையில் பல்வேறுபட்ட தனியார் நிறுவனங்களை வெளிநாடுகளுக்கோ அல்லது பாரிய வர்த்தகர்களுக்கோ விற்று அதில் வரும் பணத்தைக்கொண்டு நாட்டை நடத்துவது என்பது தொடர்பில் பேசப்படுகிறது.
அது மாத்திரமல்லாது, வியாபாரம் என்பது அரசங்கத்தின் தொழில் அல்ல. அது தனிப்பட்ட நபருடைய தொழிலாகும். வியாபாரத்தை அவர்களிடமே விட்டு விட வேண்டும் என்ற தொனியில் அரசாங்கம் பேசுகிறது.
வியாபார தொழில் நோக்கம்
இதனால் தொலைத்தொடர்பு வெளியாளர் நடத்தலாம். ஏற்கனவே 49 வீதம் வெளியாளர்களிடம இருக்கின்றது. 51 வீதம் தான் அரசாங்கத்திடம் உள்ளது.
ஆகவே மிகுதியாக இருக்கும் 51 வீதமாகவுள்ள மின்சாரம், தொடருந்து சேவை போன்ற பல்வேறு பொது நிறுவனங்னளையும் கொடுத்து விடலாம் என்ற பேச்சு IMF உடைய நிகழ்ச்சி நிரலில் இருக்கிறதா இல்லையா என்பது எனக்கு தெரியாது.
ஆனால், இந்த அரசாங்கம் பல முக்கியமான பொது நிறுவனங்களை தானியார் மயப்படுத்துவது என்பதில் மாத்திரம் அக்கறையாக இருக்கின்றார்கள் என்பது மாத்திரம் எங்களினால் தெரிந்து கொள்ள முடிகின்றது என்றும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
ரீமேக் செய்யப்படும் விஜய் டிவியின் சூப்பர்ஹிட் சீரியல்.. அதில் யார் ஹீரோவாக நடிக்கிறார் தெரியுமா? Cineulagam
யார் இந்த கிரிஜா? பிரபல நடிகருடன் நெருக்கமான காட்சிகள், திடீர் ட்ரெண்டிங், முழு விவரம்... Cineulagam